உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

❖ LDM MLDMOELD -17 ❖

உருவங்களைப் பெறுதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆழ்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும்.

அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென்னும் உண்மை ஐயமின்றித் துணியப்படுகின்றது. இவ்வுலகத்திற் காணப்படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின்கண் உண்டென்பதும் இதுகொண்டு முடிக்கப்படும்.

ஓவியக்காரன் வரையும் ஓவியங்களின் உருவங்களுக் கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், கொற்றொழில் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டடங்கள் முதலானவற்றின் வடிவங்கட் கெல்லாம் முதல் அவனறிவின்கண் அமைந்து கிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவு நூல்கள் முதலியவற்றிலெல்லாம் உள்ள பொருள்களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலவனறிவின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம்.

பருப்பொருளிற் காணும் வடிவங்கள் சில பல காலத்துள் அழிந்துபோதல்போல அறிவுப் பொருளில் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்கு மென்பது மேலே காட்டப்பட்டமையிற், கடவுள் அறிவின்கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒருகாலும் அழியமாட்டாவென்று கடைப்பிடிக்க பிராஞ்சு தேயத்தில் புகழ்பெற்ற இயற்பொருள் நூலாசிரியராய் விளங்காநின்ற பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிவுகளும் அறிவுக்கு உருவமுண்டென் பதையும், அஃது ஏனை உருவங்கள் போல் அழியாது என்றும் நிலைபெறுமென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு உருவமில்லையென எளிதிற் கூறிவிடுவது அறிவு வளர வேண்டுவார்க்கு முறையாகாது. அது கிடக்க.

இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களின் வடிவங்களும் அவை எத்துணை இழிந்தனவாயினும், அல்லது எத்துணை உயர்ந்தனவாயினும் அவை எத்துணைச் சிறியனவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/69&oldid=1584275" இலிருந்து மீள்விக்கப்பட்டது