உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

43

எனின், அங்ஙனமன்று; அறிவில்லாப் பொருள்களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமேயல்லாமல், அறிவின் கண் உள்ள உருவம் எஞ்ஞான்றும் அழியமாட்டாது.கொற்றொழிலிற் றேர்ந்த ஓர் அறிஞன் சலவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் அழகிய உருவம் அழிந்து போயினும், அதற்கு முதலாய் அவன் அறிவில் நின்ற உருவம் எஞ்ஞான்றும் அழிவதில்லை. அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அதுபோன்ற எத்தனையோ வடிவங்களை அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறிவுருவம் எஞ்ஞான்றும் அழியாமையை நன்கு உணர்ந்தவர்கள் கடவுளின் அருளுருவம் அழியுமென்று கூற ஒருப்படுவார்களோ? ஆதலாற், கடவுளின் அருளுருவம் எஞ்ஞான்றும் அழியாத தொன்றாகலின் உருவங்களெல்லாம் அழியுமெனப்பொதுப்படக் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாததொன்றாம்.

க்

இனி, உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று. அவை பருப்பொருள் களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும் அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அழியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும். அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரு தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின் கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப்பொருளின் தன்மையால் நேர்ந்த தன்றி உருவத்தினால் நேர்ந்ததன்றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய இயல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியா இயல்பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொருளாகலின் அதன்கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர் வினாரெல்லார்க்கும் விளங்கற்பாலதேயாம்.

இனி, உலகத்திலுள்ள அறிவில்லாப் பொருள்களும். அறிவுடைய உயிர்ப் பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. ஏனென்றால், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஓர் உருவத்தை அமைத்துக் கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங்களைப் பெறுதற்குமுன் அறிவு மழுங்கிக் கிடத்தலால் அவைகளும் உருவங்களைச் செய்து கொள்ளமாட்டா. கலங்கிய நிலையில் ஏதோ உருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/68&oldid=1584274" இலிருந்து மீள்விக்கப்பட்டது