உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 17

செய்து வருதலே நாம் பெற்ற அழியாச் செல்வமாகிய கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும். இன்னும்,

"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே'

என்னுந் திருமூலநாயனார் திருமொழியை டையறாது நம் நினைவில் வைத்து, நம்முள் அவரவர் செயலுக்குத் தக்கபடி இறைவனை வணங்கியும், ஆவினைப் பாதுகாத்தும், ஈகை அறங்களைச் செய்தும், எல்லாரிடத்தும் இன்சொற் பேசியும் ஒழுகுதலே அழியாச் செல்வமாகிய கல்வியாலாய பயனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/81&oldid=1584287" இலிருந்து மீள்விக்கப்பட்டது