உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

55

என்று கல்வியிற் சிறந்த கம்பர் கூறியிருத்தலால் முற்காலத்தில் ருந்த பெண்மக்கள் எல்லாருங் கல்வியில் வல்லவர்களாய் இருந்தார்களென்பது இனிது விளங்கவில்லையா?

இனிப், பெண்பாலார்க்கு ஆடை அணிகலன்கள் முதலான ஒப்பனைகள் அவரவர் அளவுக்குத் தக்கபடி சிறிது சிறிது கல்வியில்லாதவர்களுக்கு

வேண்டுவதேயாயினுங், வாடையணிகலன்களால்

வ்

உண்டாகும்

மாட்டாதாகும் என்னுங் கருத்தோடு,

ாகும் அழகு அழகாக

“குஞ்சி அழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு

என்று நாலடியாரென்னுஞ் சிறந்த பழமையான உயர்ந்த நூலிற் கூறியிருப்பதை உணர்பவர்கள் பெண்மக்களுக்குக் கல்வி வேண்டாமென்று சொல்லத் துணிவரோ கூறுமின்

தாய்மார்களே!

இனி, இங்ஙனமெல்லாம் ஆழ நினைந்து பார்க்குங்கால் ஆண்மக்களுக்குக் கல்வி இன்றியமையாததாய் இருத்தல் போலவே, அவர்போல் மக்கட் பிறப்பினரான பெண்மக்கட்குங் கல்வியானது இன்றியமையாத அழிவில்லா செல்வமாகு மென்பது நன்கு பெறப்படுகின்றது.

இனி, அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு, உயர்ந்த நூல்களைக் கற்று வரும்போதே அந்நூல்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். “கற்றறிவார் கண்டது அடக்கம் அடங்காதார், பொச்சாந்துந் தம்மைப் புகழ்ந்துரைப்பர்” என்றபடி நாம் சிறிதும் பெருமை பாராட்டாமலுஞ், செருக்கு அடையாமலும், பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமாய், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமுங் காட்டி, நல்லொழுக்கத்தில் வழுவாது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனமொழி மெய்களால் நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உலக வாழ்க்கையை இனிது நடாத்தி நாமும் பயன்பெற்றுப் பிற உயிர்களையும் பயன்பெறச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/80&oldid=1584286" இலிருந்து மீள்விக்கப்பட்டது