உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

66

மறைமலையம் 17

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்”

எனவும்,

6

“கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்'

எனவும்,

66

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்”

எனவுந் திருவாய் மலர்ந்தருளினார்.

இங்ஙனம் அறிவான் மிக்க ஆன்றோர், மக்களாய்ப் பிறந்த எல்லார்க்குங் கல்வி இன்றியமையாது வேண்டற்பாலதே யாமென்று கூறியிருக்க, அஃது ஆண்மக்களுக்குத்தாம் வேண்டுமேயல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லை யென்று உரைப்பார் உண்மை அறிந்தவராவரோ சொன்மின்கள்!

அருமைத் தாய்மார்களே, பெண்பாலார் மக்களினுந் தாழ்ந்த விலங்குகளாயிருந்தாலன்றோ அவர்கட்குக் கல்வி வேண்டாம் எனலாம்? இவ்வுலக வாழ்க்கையை நன்றாக நடத்தும் முறையில் ஆண்மக்களைக் காட்டிலும் மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் வேண்டிய அவர்கட்குக் கல்வியெனுந் தூண்டா மணிவிளக்கைத் தாராமல் அவர்களை அறியாமை என்னும் பேர் இருளிற் போகச் சொல்லுபவர்கள் உண்மை அறிந்தாராவரோ சொன்மின்கள்!

இனி, முற்காலத்திருந்த ஒளவையார், பூதப்பாண்டியன் பெருந்தேவியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலான பெண்மணிகளெல்லாருங் கல்வியில் மிகச் சிறந்தவர் களாயிருந்தமை தெரிந்தவர் பழைய நாளிற் பெண்மக்கள் எவருங் கல்வி கற்கவில்லையென்று கூறுவரோ சொன்மின்கள்!

“பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/79&oldid=1584285" இலிருந்து மீள்விக்கப்பட்டது