உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றுப் பிற’

என்றும், ஔவைப்பிராட்டியார்,

“மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னனுக்குத் தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு"

என்றும் அருளிச் செய்தனர்.

53

ஆனால், சிலர் கல்வியானது ஆண்மக்களுக்குத்தாம் வேண்டுமேயல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லை யென்றும் பழைய நாளில் மாதர்கள் எவருங் கல்வி கற்க வேண்டுமென்று நூல்களிற் சொல்லப்படவில்லையென்றுங் கூறுவார்கள்.

உயிர்கள் என்ற பொதுவகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களேயாவர். உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறுதல் என்னுந் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு; மக்களுக்கும் உண்டு. ஆனால், மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது ஏன் என்றால், நல்லது இது தீயது இது என்று பகுத்துணர்தலானுந், தம்மைப் போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானுங், கடவுளைத் தொழுதலானும், இங்ஙனமெல்லாந் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பல நூல்களைக் கற்றலானுமே மக்கள் விலங்கு களினும் உயர்ந்தவராக எண்ணப்படுகின்றனர். இவ்வுயர்ந்த அறிவின் செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கும் மக்களுக்குஞ் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர்கள் விலங்குகளேயாவர் என்றும்,

கல்வி இல்லாதவர்களுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ள மாட்டார்களென்றுங், கல்வியுடையவர்களே கண்ணுடையவர்கள் ஆவார்கள் அல்லாமல் மற்றவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்களே ஆவார்களென்றும் விளக்குதற்கன்றோ திருவள்ளுவநாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/78&oldid=1584284" இலிருந்து மீள்விக்கப்பட்டது