உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

❖ LDMMLDMOшLD -17 →

ப்

நல்ல முயற்சிகளைச் செய்வதற்கும் இன்றியமையாது வேண்ட படும் பொருளைச் சேர்த்து, ஆரவாரம் இல்லாமலும் எல்லாந் தனக்கே என்று எண்ணாமலும் தனக்கும் பிறர்க்கும் பல வகையால் நல்ல பயன்கள் விளையும்படி அதனைப் பயன்படுத்தல் வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.

இன்னும், இவ்வழிந்து போகும் பொருளைப் படைத்தவர் களும் படையாதவர்களுமாகிய எல்லாருங் வெள்ளத்தால் அழியாதாய் வெந்தழலால் வேகாததாய் அரசர்களாலுங் கைப்பற்றப்படாதாய்க் கொடுக்கக் கொடுக்கக் குறையாதாய்க் கள்வர்களுக்காக அஞ்சவேண்டுவது இல்லாதாய் நமது அறிவினுள்ளே இருத்தலாற் பாதுகாப்பதற்கு எளிதாய் விளங்கும் அழியாச் செல்வமாகிய கல்விப் பொருளைப் பெறுதற்கு மிகவும் முயற்சியுடையவர்களாய் இருக்க வேண்டும். இதுபற்றியே, "வெள்ளத்தால் அழியாது” என்னும் அரிய பாட்டு இந்தக் கட்டுரைக்கு முதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

செல்வமானது வெளியேயுள்ள பருப்பொருளாதலால் வெள்ளத்தால் அழியும்; வெந்தழலால் வேகும். கல்வியானது நமது உயிரைப்பற்றி உள்ளே இருக்கும் நுண்பொருளாகையால் வெள்ளத்தில் அழியாது; வெந்தழலில் வேகாது. செல்வமானது பொன் நிலம் வீடும் முதலிய பருப்பொருளாயிருத்தலால் அரசர்களாற் கைப்பற்றவும் படும். கல்வியானது அறிவுருவான நுண் பொருளாகையால் அவர்களாற் கவரப்படமாட்டாது. செல்வமானது பிறர்க்கு எடுத்துக் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போகும். கல்வியானது பிறர்க்கு எடுத்துச் சொல்லச் சொல்ல அளவில்லாமற் பெருகும். செல்வத்தை வைத்திருப்பவர்கள் எங்கே கள்வர் வந்து திருடிக்கொண்டு நம்மையுங் கொன்று

விடுவார்களோ என்று எந்நேரமும் அச்சத்திலேயே காலங் கழிக்க வேண்டும். கல்வியை வைத்திருக்கும் புலவர்களோ அங்ஙனங் கள்வர்க்குச் சிறிதும் அஞ்சவேண்டுவதில்லை. செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அளவு கடந்த முயற்சி வேண்டும். கல்வியைப் பாதுகாப்பதற்கு அத்தகைய வருத்தம் வேண்டுவதில்லை.

இங்ஙனமெல்லாங்

கல்வியானது சல்வத்தினுஞ் சிறப்புடைய அழியாச் செல்வமாய் இருத்தலினாலேயே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/77&oldid=1584283" இலிருந்து மீள்விக்கப்பட்டது