உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

51

தமது சென்ன பட்டினம் முழுதும் ஈடாக வைத்தாலும், அது அவற்றிற்கு ஈடாகாதே! அப்படிப்பட்ட உயர்ந்த கட்டிடங் களெல்லாம் பீரங்கி வெடிகளால் தகர்க்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கின்றன! எத்தனை அரசர்கள், எத்தனை செல்வர்கள், எத்தனை போர் மள்ளர்கள் இச்சண்டையில் சாய்ந்து போனார்கள்! நேற்று ஆடையணிகலன்கள் அணிந்து அறுசுவையுணவு உண்டு தம்மை மறந்து அகங்களித் திருந்தவர் களெல்லாரும் இன்று அவற்றை முற்றும் இழந்து மனைவி யொருபுறம் மக்கள் ஒருபுறமாய்க் கையறுந்து காலறுந்து கதறினரே! ஐயகோ! இச்சண்டையினால் நேர்ந்து வந்த அழிவுகளை அறிந்து வைத்தும், இன்னும் நாம் இவ்வொளி ஆரவாரங்களைச் செல்வங்களென்று எண்ணலாமா? இது பற்றியன்றோ,

“தெய்வச் சிதம்பரத்தேவா உன் சித்தந் திரும்பிவிட்டாற், பொய்வைத்த சொப்பனமாம் மன்னர் வாழ்வும் புவியுமெங்கே, மெய்வைத்த செல்வ மெங்கே

மண்டலீகர்தம் மேடையெங்கே, கை வைத்த நாடகசாலை யெங்கே, யிதுகண்மயக்கே

என்று பட்டினத்துப் பிள்ளையாரும் அருளிச் செய்தார்.

ங்ஙனம் வெள்ளத்தால் அழிந்து போவதும் வெந்நெருப் பால் வெந்து போவதும் அரசர்களாற் கைப்பற்றப்படுவதுங் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போவதுங் கள்வர்க்காக நம்மை அஞ்சுவிப்பதும் பாதுகாப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தருவதுமான இச்செல்வம் நம்மால் எந்நேரமும் விரும்பத்தக்க தன் றென்பது இதனால் இனிது விளங்குகின்றதன்றோ?

இவ்வாறு சொல்லுதலைக் கொண்டு நாம் செல்வத்தை வேண்டாமல் வறுமைப்பட்டு இந்த மண்ணுலகில் வருந்தியே காலங்கழிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தல் கூடாது.நமது மண்ணுலக வாழ்க்கை இனிது நடப்பதற்கும், பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கும் ஈகை அறங்களைச் செய்வதற்கும், மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/76&oldid=1584282" இலிருந்து மீள்விக்கப்பட்டது