உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் -17

அருளிச் செய்யப்பட்டுள்ள அரும்பெரு நூல்களை ஓதி உணரவும் முயற்சி வாய்ந்தவர்களாய் உள்ள ஆண் பெண் பாலரைக் காண்பது அரிதினும் அரிதாய் போய்விட்டதே!

ஆ! நாம் நிலையாக நினைத்த மாடமாளிகைகள் ஆடை அணிகலங்கள் தட்டு முட்டுகள் முதலானவைகள் எல்லாம் நாம் நினைத்த வண்ணம் நிலையாக இருப்பவைதாமா! இல்லை, இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஐதராபாத்திலும் வாணியம் பாடியிலும் நேர்ந்த பெரியதொரு வெள்ளப் பெருக்கினால் எத்தனை வீடுகள் எத்தனை மாளிகைள் நிலமட்டமாகத் துடைக்கப்பட்டு இருந்த இடமுந்தெரியாமல் அழிந்துபோயின! அவ்வீடுகளோடு அவ்வீடுகளில் இருந்த எவ்வளவு பண்டங்கள் எவ்வளவு ஆடை அணிகலன்கள் அழிந்து ஒழிந்து போயின! அப்போது அங்கே பெருஞ் செல்வர்களா யிருந்தவர்களெல்லாருந் தம்மால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏழைக் குடிமக்களைக் காட்டிலும் இழிந்த நிலையை அடைந்தவர்களாகி, உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் இன்றித் தத்தளித்ததெல்லாம் நாம் கேட்டு நெஞ்சம் நெக்குருகி வருந்தினம் அல்லமோ?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் மேற்குத் திசையில் உள்ள சிறந்த நகரமாகிய மெசினாப்பட்டின மானது நில அதிர்ச்சியினால் அழிந்து நீருக்கும் நெருப்புக்கும் இரையானதும், அப்போது அப்பட்டினத்திலிருந்த ஐந்தடுக்கு ஆறடுக்கு மாளிகைகளும், அவற்றில் இருந்த அரியபெரிய பண்டங்களும், அவற்றில் இருந்த நூறாயிரக்கணக்கான மாந்தர்களும், அளவற்ற செல்வங்களும் நெருப்பிலே வெந்து நீரில் அமிழ்ந்துபோன வரலாறுகளையெல்லாம் நினைக்கும் போது நாம் நிலையாக நினைத்திருக்குஞ் செல்வங்களுஞ் செல்வங்களென்று காணப்படுமோ? அவற்றை மதிக்கும் நமது அறிவும் அறிவென்று சொல்லப்படுமோ?

சில நாட்களின்முன் மேற்கேயுள்ள ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை, ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனஞ் சொல்வேன்! எங்கே பார்த்தாலுஞ் செக்கச் செவேலென்ற செந்நீர்க் களரியும், பிணக்காடும், பீரங்கி வெடியுங், கூக்குரல் ஒலியுமாய் இருந்தனவே! அத்தேயங்களிலுள்ள பத்துப் பதினைந்து மாடமாளிகைகளுக்குந் தேவகோட்டங்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/75&oldid=1584281" இலிருந்து மீள்விக்கப்பட்டது