உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

49

விரும்புகின்றோமா? கீழே தவறி விழுந்தாலும் உடையாமல் வலுவாய் உள்ள செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்களைக் கையாள விரும்புகின்றோமா? விலை ஏறியிருந்தாலும் நீண்டநாட் பயன்படுஞ் செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்களையல்லவோ பொருள் கொடுத்து வாங்க விழைகின்றோம்? இங்ஙனமே நாம் நாடோறுங்கையாண்டு வரும் பொருள்களிலுங்கூட விரைவில் அழிந்து போகாமல் நீண்ட நாள் நிலைத்திருக்கும் பொருள் களையே நாம் அடைய விரும்புதலால், நம்மில் ஒவ்வொருவருக்கும் அழியாச் செல்வத்தையே பெறவேண்டுமென்னும் அவா இயற்கையாகவே வேரூன்றி நிற்கின்றது.

ங்ஙனம் அழியாச் செல்வத்தையே அடைய வேண்டு மென்னும் அவர் நம்மெல்லாரிடத்தும் இயற்கையாக இருந்தாலும், முத்துச் சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும் பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் மறைந்த மதியின் துலக்கமுங், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும்போல் நம்மை மூடிக் கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர் களாகி நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முயலாமல், நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைத்து, அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம்.

பாருங்கள்! நம்மவர்களிற் பெரும்பாலோர் மாடமாளி மாளிகை களையும் ஆடை அணிகலங்களையும் தட்டு முட்டுகளையுந் தின்பண்டங்களையும் நாடகக் காட்சிகளையும் வேடிக்கை விளையாட்டுகளையுமே மேலான செல்வங்களாகக் கருதி அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலும் விடாமுயற்சி யுடையவர்களாய் இருக்கக் காண்கின்றோமே யல்லாமற், சிறிது நேரமாயினும் அடக்க ஒடுக்கத்தோடிருந்து நம்மைப் படைத்த சிவபெருமானை நினைக்கவும், நம்மைப் போலவே அவ்வாண்டவனாற் படைக்கப்பட்ட உயிர்களின் நன்மையைக் கருதவும் அவை பசியாலும், நோயாலும் வருந்துவதைக் கண்டு மனங்கசிந்து இரங்கித் தம்மால் இயன்ற அளவு அவற்றிற்கு ஒரு கைப்பிடி உணவாவது ஒரு காசு மருந்தாவது உதவி அவற்றின் துன்பத்தைப் போக்கவும், தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் ஒளவைப் பிராட்டியார் காரைக்காலம்மையார் சேக்கிழார் பெருமான் முதலான உயர்ந்த அறிவுடையோரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/74&oldid=1584280" இலிருந்து மீள்விக்கப்பட்டது