உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

7. கல்வியே அழியாச் செல்வம்

"வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்

வேகாது வேந்தராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது, கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ மிக எளிது கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப் பொருள்தேடி யுழல்கின்றாரே!”

சில நாளில் தோன்றிச் சிலநாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம்மக்களுடம்பிற் பிறந்தவர்களான நாம் எந்த வகையாக செல்வத்தைப் பெறுதற்கு முயலல் வேண்டு மென்றால், என்றும் அழியாததாய் நம் உடம்பு அழிந்தாலுந் தான் அழியாமல் நமது உயிரொடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புகளிலுந் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ் செல்வத்தையே அடைவதற்குக் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும். ஏன்? அழியாத செல்வத்தையே பெற வேண்டு மென்னும் விருப்பம் நம்மில் ஒவ்வொருவரிடத்தும் இயற்கை யாவே காணப்படுவதாலும்., அவ்விருப்பம் இல்லாதவர்களை எவ்விடத்தும் எக்காலத்துங் காண்டல் கூடாமையானுமென்க.

ஒரு திங்கள், இரண்டு திங்களிற் கிழிந்து போகுஞ் சீமைத் துணிகளை வாங்க விரும்புகின்றோமா? பன்னிரண்டு பதினைந்து திங்கள் கிழியாமல் அழுத்தமாயிருக்கும் நாட்டுப் புடவைகளை வாங்க விரும்புகின்றோமா? விலை சிறிது மிகுதியாய் இருந்தாலும் அழுத்தமாய் நீடித்திருக்கும் ஆடைகளையல்லவோ வாங்க ஆவல் கொள்கின்றோம்? சிறிது கை தவறினாலும் கீழ் விழுந்து நொறுங்கிப்போகும் மட்பாண் டங்களைப் புழங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/73&oldid=1584279" இலிருந்து மீள்விக்கப்பட்டது