உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அறிவுரைக்கொத்து

"அவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியான் இவ்வுருவன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே'

47

என்ற அப்பர் அடிகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க.

6

என்று இத்துணையுங் கூறியவாற்றால், உருவமானது பெரிதும் பாராட்டற்பாலதேயன்றி இழிக்கப்படத் தக்கதன் றென்பதும், அறிவு விளக்கமெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃதழியாத உருவ அமைப்பு வாய்ந்ததாகவே நிலைபெறுமென்பதும், உலகிற் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் பொருட்டுக் காரணனான கடவுளின் எல்லையற்ற அறிவின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதும், கடவுள் அருட்குணமுடையராயும் அறிவுருவ முடையராயும் விளங்குவரல்லால் நிர்க்குணராயும் அருவராயும் இருப்பரல்லரென்பதும், எவரெவர் எவ்வெவ் வுருவிற் கடவுளை வழிபடினும் அவரவர்க்கு அவ்வவ் வுருவிற்கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக்காட்டப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/72&oldid=1584278" இலிருந்து மீள்விக்கப்பட்டது