உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் -17

இத்துணைச் சிறந்த அறிவை எவரும் இயற்கையாகவே பெற்றுக் கொள்ள இயலாது.ஏனென்றால், எல்லா உயிர்களினறி வையும் அறியாமை என்னும் பேரிருள் மறைத்துக் கொண்டிருக் கிறது. இருளைப் போக்குதற்கு ஒளியினுதவி கட்டாயமாக வேண்டப்படுதல் போல், நமதறிவை மறைக்கும் அறியாமை இருளைப் போக்குதற்குங் கல்வியாகிய விளக்கும் இன்றியமை யாது வேண்டப்படுகின்றது. கல்வியில்லாதாரிற் சிலரும் அறிவுடையோராக இருக்கக் காண்கின்றோமே யென்றால், அவர் அறிவுடையார் செய்யுஞ் சில அறிவுச் செயல்களைப் பார்த்தும் பழகியுஞ் சிறிது அறிவுடையராகக் காணப்படினும், அவர் போலியாகப் பெற்ற அச்சிற்றறிவை மேன்மேற் பெருகச் செய்வதற்குக் கல்வியில்லாமையால் அவர் அறிவு பயனின்றாய்க் கழியும். இது பற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

66

“கல்லாதவன் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார்’'

என்றருளிச் செய்தனர். மேலும் மக்களுக்கும் விலங்கினங் களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றதோ, அவ்வளவு வேறுபாடு கல்வியறிவு உடையவர்கட்கும், அஃதில்லாதவர் கட்கும் உண்டென்பதும் விளங்கத் திருவள்ளுவ நாயனார்,

66

'விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்’

என்றருளிச் செய்திருக்கின்றனர். ஆகையால் கல்வியறிவு இல்லாதவர் அதிற் சிறந்து விளங்குவதும், அறிவிற் சிறந்த தாழில்களைச் செய்து முடிப்பதும் இயலா.

உடற் பாதுகாப்பின் பாருட்டு எத்தொழிலைச் செய்தாலும், கல்வியின்றி அதனைச் செய்தலாகாது. நம் நாட்டவர்களோ வயிறு வளர்ப்பதற்குச் சோறு கிடைத்தால் போதுமென்றும், இப்பிறப்பில் அடை ய வேண்டிய

இன்பங்களைப் பெறுதற்கு ஏராளமான பொருளைத் தொகுத்துக் கொண்டால் போதுமென்றுஞ் சொல்லிக் கல்வி கல்லாமல் அறியாமையிலேயே தமது காலத்தைக் கழித்து மாண்டு போகின்றனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/83&oldid=1584289" இலிருந்து மீள்விக்கப்பட்டது