உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 17

பிடித்திருக்கும் பொறிகளால் விளைந்த,விளைந்திருக்கின்ற நலன்கள் அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்து விடாமல், இன்னுந் தமது உணர்வினைப் பல துறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமைகளை நாடோறும் கண்டறிந்து வருதலால் இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலன்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவையெல்லாம் இப்போது யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும்?

ஆகவே, பகுத்துணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம் விலங் கினங்களைப்போல் வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், அப் பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும் அவற்றால் பல சிறந்த இன்பங்களையுங் கண்டறிந்து, அவற்றால் தாமும் பயன்பெற்று மற்றோரையும் பயன்பெறச் செய்து வருதல்போல, நாமும், அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப் பட்டிருக்கின்றோம் அல்லமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/99&oldid=1584305" இலிருந்து மீள்விக்கப்பட்டது