உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

79

திரும்பவும் அந்நீர்மகன் அக்கப்பலின் இடப்பக்கமாய்ப் போந்தனன். கப்பல் மேலிருந்தவர் ஒரு கயிற்றில் ஒரு கடல் மீனைக் கட்டி அதனை அவன் முன்னே தொங்க விட்டனர். அவன் அதனைப் பிடித்துப் பார்த்தனனேயன்றி வேறொன்னும் செய்திலன். பின்னர் அவன் அதனைவிட்டு நீந்திப் போய் அம்மரக்கலத்தின் பின்னணியத்திற்கு வந்தான்; வந்து மறுபடியும் சுக்கானைப் பற்றிக் கொண்டனன். அதுகண்ட மீகாமன் ஓர் இருப்பு வல்லயத்தை எடுத்து அதனை அவன் மீதெறிந்து அவனைக் கொல்லுதற்கு முனைந்தான். ஆனால், அவ்வல்லயமோ அக்கப்பல் கயிறுகளிடையே சிக்கிக் கொண்டமையால், அக்கடல் மகனது முதுகில் பட்டதேயன்றி அஃது அவனை ஊறுபடுத்தவில்லை; தன் முதுகிற்பட்டதும் அவன் திரும்பி முன்போலவே தனது முகத்தைக் காட்டினான். அதன்பிறகு, அவன் மறித்தும் முன்னணியத்திற்குப் போந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பெண்பாவையை உற்றுப்பார்த்துக் காண்டிருந்தான். அதன்மேல் மீகாமனின் துணைவன் அவன் மேலெறிவதற்கு அவ்வல்லயத்தை எடுத்து வருகவென்று கூவினான். ஆனால், முன்னொருகால் அதே கடல் வழியில் அதே மரக்கலத்தில் மேலேறிப் போந்து தன்னைத் தானாகவே மடித்துக் கடலில் எறியப்பட்ட புதுமையான ஓர் உயிராய் அவன் இருக்கலாமோ என ஐயுற்று அஞ்சி, அத்துணைவன் அவ்வல்லயத்தால் அவனைக் கொல்லாமல், அதனால் மெல்ல அவனை முதுகிற் குத்தித் தள்ளினான். அங்ஙனம் குத்தவே, அக்கடல்மகன் முன்போலவே தன் முகத்தைச் சினந்து காட்டி, அக்கப்பலின் மேல் தட்டு வரையில் ஏறிவந்தான். வந்தவன் கப்பலாட்களில் இருவர் பிடித்திருந்த கயிறு ஒன்றைத் தானும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவ்விருவரும் அக்கயிற்றை அவன் கையினின்றும் வலிந்து ழுக்கவே, அந்நீர்மகனும் அக்கயிற்றொடு கூடவே கப்பலின் மேல் தட்டிற்கு இழுக்கப்பட்டனன். ஆனால், மேல்தட்டிற்கு வந்தவுடனே அவன் உ. னே கட குதித்துத் தொலைவில் நீந்திப் போயினன். மீண்டும் சிறிது நேரத்தில் அக்கடல்மகன் நீந்திக் கொண்டு கப்பலருகில் வந்தான். இப்போது அவன் தண்ணீருக்குமேல் கொப்பூழ் வரையில் உயர எழுந்தமையால், அம்மரக் கலத்திலிருந்தவர்கள் அவனது உடம்பின் மேற்பகுதியை நன்கு பார்க்கக்

இழு

.

லில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/112&oldid=1584726" இலிருந்து மீள்விக்கப்பட்டது