உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மறைமலையம் -18

25. ஒரு கடல் மனிதன்

உடனே அவனை

66

1725-ம் ஆண்டு ஒரு கப்பல் மேல்கடலில் நூற்றெண்ப தடி ஆழமுள்ள ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கையில் காலை பத்துமணிக்கு மக்கள் வடிவம் வாய்ந்த ஒருவன் அக்கடல் நீரினின்றும் மேலெழுந்து அக்கப்பலின் இடப்பக்கத்தே காணப்பட்டனன். அவனைக் கண்ட அக்கப்பல் தலைவன் மேலே தூக்கிக் கப்பலிற் சேர்த்தற் பொருட்டு ஒரு கொளுக்கியை எடுத்தான். அது கண்ட அக்கப்பல் மீகாமன், அத்தலைவனைத் தடுத்து அவன் உண்மையான மனிதன் அல்லன். கடல்நீரில் உயிர்வாழும் மனிதனாவான்; அவனை நீங்கள் மேலிழுக்க முயன்றால், அவன் உங்களைக் கீழ் இழுத்து விடுவன்” என்றான். அதுகேட்ட தலைவன், அக்கடல் மனிதனின் வடிவம் முழுமையும் பார்க்க வேண்டி ஒரு சிறுகோலை எடுத்து அவனது முதுகின்மேல் எறிந்தான். எறிந்தகோல் தன்மேல்படவே அவன் சினங் காண் ான் போல் போல் தன் இருகைகளையும் மடித்துக் காண்டு தன் முகத்தைக் காட்டினான். அதன்பிறகு அவன் அக்கப்பலைச் சுற்றிச் சென்று அதன் பின்னணியத்திலுள்ள சுக்கானைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டான். அதுகண்ட அக்கப்பல் ஆட்கள், அவன் அச்சுக்கானைப் பழுது படுத்தி விடுவன் என்று அஞ்சி அதனை இறுக்கி வைக்க வேண்டியவர்களானார்கள். பின்னர் அக்கடல் மகன் அங் கிருந்து, மக்கள் நீந்துதல் போலவே நீந்திக்கொண்டு கப்பலின் முன்பக்கத்திற் போய், அதன் முன்னணியத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஓர் அழகிய பெண்ணுருவைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பால் அவன் அப் பெண்ணுருவைப் பற்றிக் கொள்ள விழைந்தான்போற் கடல்நீரினின்றும் மேல் கிளம்பினான். இவ்வளவும் அக்கப்பலில் இருந்தார் எல்லார் கண்ணுக்கும் எதிரே நிகழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/111&oldid=1584725" இலிருந்து மீள்விக்கப்பட்டது