உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

77

66

24. ஒரு மீகாமனது கனவு

‘கனவு காண் காலத்தும் பிறர்க்குதவிசெய்வதே அழகிது, நல்லது என்றார் மேனாட்டு நாடக நூலாசிரியர் ஒருவர். ஒருகால் ஒரு சிறந்த மீகாமன் தனது கப்பலில் தன் அறையி னுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனது மரக்கலம் அப்போது சென்று கொண்டிருந்த “நடுநிலக் கடல்” அமைதியாகவே இருந்தது; வானத்திலும் மப்பு இல்லை. ஆனால் உறங்கிக் கொண்டிருந்த அக்கப்பல் தலைவனோ தனது கப்பல் கடலுள் அமிழ்வதாகக் கனவு கண்டு, அக்கனவு நிலையிலேயே அறையைவிட்டு வெளியே நடந்து வந்து, சுக்கான் திருப்புவோன் வேலையைக் கைக்கொண்டு தன் கப்பலாட்களை யெல்லாம் விழிப்பாய் இருக்கும்படி கூவினான்; தூக்கத்திலிருந்த வாறே தம் தலைவன் செய்யும் செயல்களைக் கண்டு இறும் பூதுற்ற அவ்ஆட்களெல்லாரும் நகையாடினர்; அவர்தம் நகையொலியைக் கேட்டு விழித்துக் கொண்ட அம்மீகாமன் மீண்டும் தன் அறைக்குட் சென்று மனக் கலக்கத்துடனேயே தூங்கலாயினன். அங்ஙனம் தூங்கிய சிறிதுநேரத்தின் பின் திரும்பவும் அவன் விழித்தெழுந்து பார்க்கப், புயற்காற்று அறிவிக்கும் கருவி, வரப்போகும் சூறாவளியினை அறி வித்தது. உடனே அவன் மேல் தட்டின் மேலோடித் தன் ஆட்களை கூவியழைத்தனன். சுக்கான் திருப்பிக் கொண் டிருந்த ஆடவன் “ஐய, மறுபடியும் கனவோ?” என வினவி னான். என்றாலும், அவன்றன் ஆட்கள் அவன் சொற்படியே சென்று அக்கப்பலின் பாய்களை உடனே சுருக்கிக் கட்டினர். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெருஞ்சூறைக் காற்று வந்து வீசியது. ஆயினும், பாய்கள் மடக்கிக் கட்டப் பெற்றமையால் இக்கப்பல் ஏதோர் இடருமின்றிச் சென்றது; முன்னதாகவே பாய் மடக்கிக் கட்டப்பெறாத மற்றக் கப்பல்களோ, அப் பெருங்காற்றினால் அலைக்கப்பட்டுக் கடலுள் அமிழ்ந்து போயின. கனவிலும் தன் கடமையைச் செலுத்திய தம் தலைவனுக்கு அக்கப்பலாட்கள் எல்லாரும் நன்றி செலுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/110&oldid=1584724" இலிருந்து மீள்விக்கப்பட்டது