உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

  • மறைமலையம் -18

23. உதவிச்சம்பளங் கேட்டல்

னே

தன் அரசனுக்காக உற்ற நேரத்தில் போர்புரிந்து வெற்றி பெற்ற அஞ்சா ஆண்மையனான படைஞன் ஒருவன், தனக்கு உதவிச் சம்பளம் அளிக்கும்படி கேட்கத் தன் அரசன்பால் போந்தனன். போந்து அரசற்குத் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க, அரசன் “நல்லது பார்ப்போம்” என்றான். உட அம்மறவன், “அதற்காகத் தேவரீர் காக்கவேண்டுவதில்லை, தாங்கள் இப்போதே பார்க்கலாம்” என்று சொல்லி, உடனே தன் உடம்பின்மேல் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டுப், போர்த்தழும்புகள் நிறைந்த தன் மார்பினைக் காட்டி னான். அதனை அரசன் கண்டதும் "இனிப் பார்க்கலாம்” என்று சொல்ல மாட்டானாய், உடனே அவற்கு உதவிச் சம்பளம் கொடுக்குமாறு கட்டளையிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/109&oldid=1584723" இலிருந்து மீள்விக்கப்பட்டது