உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

75

21. நீண்டகாலக் கடன்

நூலாசிரியர் ஒருவரை ஒருநாள் ஓர் இரவலன் எதிர்ப் பட்டனன். உடனே அவன் தனக்குக் கால்ரூபா உதவி செய்யும்படி அவரை விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கேட்டு நெருக்கினான். அவர் தமது சட்டைப் பையினுட் கையை நுழைத்துத் தடவ, அதன்கட் சில்லறையில்லாமல் ஒரு முழு அரை ரூபா மட்டும் இருக்கக் கண்டார். அவர் அதனை எடுத்து அவ்விரவலனுக்குக் கொடுத்து "நீ எனக்கு மிச்சங்கால் க்ெ ரூபா கடன் கொடுக்கவேண்டியிருப்பதை மறவாதே." என்று கூறிப் புன்னகை புரிந்தார். அதற்கு அவன் “அப்படியே, பெருமானே, யான் அக்கடனைத் தங்கட்குத் திருப்பிக் கொடுக்கும் வரையில் உயிரோடிருப்பீர்களாக!" என்று மறுமொழி நுவன்று சென்றான்.

22. ஞாயிறும் திங்களும்

6

என

ஒருகால் நண்பர் இருவர் ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்) என்னும் இரண்டில் எது பயன்மிகவுடை வழக்கிடலாயினர். முடிவாக அவ்விருவரில் ஒருவர், “ஓ! எனக்கு அது தெரியும். திங்களானது ஞாயிற்றினும் இரு மடங்கு பயன் உடையது; ஏனென்றால், அது தனது விளக்கத்தை எல்லாரும் வேண்டும் இராக்காலத்தே ஒளிவீசுகின்றது; மற்று, ஞாயிறோ தன்னை எவரும் வேண்டாத பகற்காலத்தில் ஒளிர்கின்ற தன்றோ!” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/108&oldid=1584722" இலிருந்து மீள்விக்கப்பட்டது