உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மறைமலையம் -18

6

ஆராய்ந்து பார்க்க, மேலுள்ள பருப்பொருள்களைக் கீழே தன்கண் இழுத்துக்கொள்ளும் ஓர் ஆற்றல் இந்நிலவுல கத்திற்கு உண்டென்னும் அரும்பேருண்மையினை அவர் கண்டு கொண்டார்.இந்நிலவுலகமாகிய பருப்பொருளுக்கு உள்ள இவ் ழுக்கு மாற்றலை அவர் கண்டறிந்த பிறகுதான், வான் வெளியிற் பந்துகள் போல் சுழலா நிற்கும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏழு உலகங்களும், அவற்றோடொத்த அளவிடப்படாத எண்ணிறந்த வான்மீன் மண்டிலங்களும் தத்தம் பருமனுக்குத் தக்க தாலைவில் நின்று ஒன்றையொன்று இழுத்தபடியாய் ஒன்றையொன்று சுற்றிச் செல்லும் வியப்பான உண்மை நிகழ்ச்சியினையும் இன்னும் இதுபோன்ற வேறு பல புதுமை களையும் கண்டு வெளியிட்டார்.

இப்பேராசிரியரது அறிவு வரலாற்றை எண்ணிப் பார்க்குங்கால் பகுத்தறிவொடு கூடாத கட்பார்வை பயன் இலதாதலை உணர்கின்றனம் அல்லமோ? மக்களெல்லாரும் கண்ணினாற் பொருள்களையும் பொருள் நிகழ்ச்சிகளையும் L பார்த்துண்டாகிய ஓரளவான பகுத்தறிவு கொண்டே வாழ்க்கை செலுத்தி வருகின்றனரென்பது உண்மையே. என் றாலும், ஒருபொருள் தன்மை மற்றொன்றின் வேறாதலும், அன்றி ஒன்று மற்றொன்றை ஒத்திருத்தலும், அவ்வாறெல்லாம் அமைந்த அமைப்புகளின் கீழ் அவை தம்மை அமைத்த முதற்பேரறிவு ஒன்று மிளிரும் பான்மையும் எல்லாம் கருத்து ஒருங்கி ஆராய்ந்து பார்ப்பவர் அம்மக்களுள் எத்தனை பேர் உளர்? ஒரோவொரு காலங்களில் ஒரோவொருவரே மிக அரியராய் ஆங்காங்குக் காணப்படுகின்றனர். ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் எடைக்கல் அங்கும் இங்குமாய் ஊசலாடுவதை எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னும் பின்னும் பார்த்திருக்க வேண்டும்! அதிலிருந்து நாழிகை அறிவிக்கும் கடிகாரக் கருவியினை அமைக்கும் நுண்ணறிவு கலிலீயோ என்னும் வான் நூலாசிரியர்க்கன்றி வேறெவர்க்கேனும் தோன்றியது உண்டா? இல்லையே!

பின்னும் ஒரு கால் அவ்வான் நூலாசிரியர் தொலைவு நோக்கி என்னும் ஒரு வியத்தகு கண்ணாடியினை அமைக்கும் முறை கண்டறிந்ததும் மிகவும் வியக்கற்பாலதாயிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/115&oldid=1584729" இலிருந்து மீள்விக்கப்பட்டது