உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

83

மூக்குக் கண்ணாடி செய்யும் ஒருவர், தொலைவிலுள்ள பொருள்களைக் கட்புலனுக்கு அருகே காட்டும் ஓர் அரிய கருவியினை அமைத்து அதனை ஒரு செல்வர்க்கு வழங்கிய செய்தியைக், கலிலீயோ என்னும் அப்பேரறிஞர் ஒரு நாள் தற்செயலாகக் கேள்வியுற்றார். கேட்ட அந்நாள் முதல் அவர் அங்ஙனம் தொலைவில் உள்ளவைகளை அருகில் காட்டும் கருவியின் அமைப்பைத் தொடர்பாக ஆராய்ந்து செய்து செய்து பார்த்துக் கடைசியாகத் 'தொலைநோக்கி' (Telescope) என்னும் புதுமையான கருவியை அமைத்து முடித்தார். அக்கருவியானது அமைக்கப்பட்ட பிறகுதான், எத்தனையோ கோடி மைல் களுக்கு அப்பால் உள்ள ஞாயிறு, திங்கள் முதலான உலகங்களின் இயல்புகளையும், அவை தமக்கும் எட்டாத் தொலைவிலுள்ள ஏனை வான்மீன் மண்டிலங்களின் இயல்பு களையும் எல்லாம் அவரும் அவர் வழி வந்த மற்றை வான் நூலாசிரியர்களும் நன்கறிந்து கண்டு நம்போல்வார்க்கெல்லாம் அவ்வுண்மைகளை நன்குவிளக்கி வருகின்றனர். கலிலீயோ என்னும் அவ்வறிஞர் பெருமானுக்கு அத்துணை விழிப்பான கருத்தும் ஓயாத ஆராய்ச்சியறிவும் ஆராய்ந்தவைகளைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியும் இல்லாதிருந்தால், நாம் அம்மேலுலகங்களின் உண்மைகளை உணர்ந்து கொள்ளல் இயலுமோ? அவ்வுண்மைகளை அறியாமல் அவ்வுலகங் களைப் பற்றிய வெறுங் குருட்டு நம்பிக்கைகளிலும் பொய்க் கதைகளிலுமன்றோ நம் வாழ்நாளை நாம் விலங்கினங்களைப் போல் கழிக்க வேண்டும்?

இன் ன்னும் பாருங்கள்! கூவல் கூவல் ஆமை, குரை ரை கடல் ஆமையைப் பார்த்துப் பழித்தது போலத் தாம் இருக்கும் நாட்டையும் தம் நாட்டிலுள்ள மக்களையும் தவிர வேற்று நாடுகளையும் அந்நாடுகளில் உள்ள மக்களையும் பற்றிச் சிறிதுமே உண்மை தெரியாமல் அந்நாடுகளையும் அம் மக்களையும் இழித்துப் பேசுவோர் நம்மில் மிகச் சிலராகவே காணப்படுகின்றனர். தாமிருக்கும் ஊரில் தாம் உயிர் வாழ்வதற்கு வேண்டும் கருவிகள் கிடைக்கப் பெறாமல் வறுமைப்பட்டுத் துன்புறுவோரே அயல்நாடுகள் சென்று குடியேறக் காண்கின்றோம். இவ்வாறாக நம்மனோர் பெரும்பாலும் தாமிருக்கும் இடத்தைவிட்டுப் பெயராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/116&oldid=1584730" இலிருந்து மீள்விக்கப்பட்டது