உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

84

மறைமலையம் -18

சோம்பர்களாயும், உலகத்தின் பல பகுதிகளையும் கண்டு அறிவை அகலமாக்கும் விரிந்த நோக்கம் இல்லாதவர் களாயும் இருத்தலறிந்தே நம் பண்டை ஆசிரியர்கள் இந்திய இலங்கை நாடுகள் எங்கும் கடவுளை வணங்குவதற்கென்று மாபெருங் கோயில்கள் அமைத்து, அம்முகத்தால் ஓர் ஊரவர் வேறு ஓர் ஊர்சென்று அன்பிலும், அறிவிலும் விரிந்த நோக்கத்திலும் மேன்மேற் பெருகுதற்கு, வழிசெய்து வைத்தனர். வைத்தும், கடற்கப்பால் உள்ள நாடுகளுக்குக் கப்பலேறிச் சென்று ஆங்காங்குக் குடியேறக் கருதும் மனத்திட்பம் உடையார் யார் நம்மில் இன்னும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். கப்பலேறிச் சென்றால் கடலுக்கு இரையாவோம் என்னும் அச்சம் அவர்கள் உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்றது! அதுவேயுமன்றிக், கப்பலேறிச் செல்வாரைத் தமது சாதிக்குட் சேர்க்கலாகாது என்னும் கட்டுப்பாடும் சில வகுப்பில் கடுமையாய் இருக்கின்றது! இதனாலேயே, நிலவளம், நீர்வளம், பொருள் வளம் நிரம்பிய பெரிய நாடுகளில் சென்று குடியேறி இனிது உயிர்வாழும் பெரும்பேற்றையும் உரிமையையும் இழந்து, நம் இந்து மக்களில் பெரும்பாலார் சிறிய சிறிய வெற்றூர்களிலிருந்து மிடிப்பட்ட குறுவாழ்க்கை செலுத்து

கின்றனர்!

ஆனால், மேல்நாட்டவரான வெள்ளைக்கார நன் மக்களோ தாம் பிறந்த ஊர்களில் இருக்குமளவில் மன அமைதி பெறாத பெருநோக்கமும் பேரறிவும் பெருமுயற்சியும் பேரூக்கமும் அஞ்சா ஆண்மையும் வாய்ந்தவர்களாய் இந்நிலவுலக மெங்கும் உள்ள பெருநிலப் பரப்புகளை எல்லாம் கடல் தாண்டிக் கண்டு கைக்கொண்டு அவைதம்மையெல்லாம் தமக்கு நீங்கா உரிமைகளாக்கி இன்பவாழ்க்கை செலுத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு இந்நில உலகமெங்கும் பரவி இனிது வாழ்வதற்கு, இவர்கள் முன்னோரிற் சிலர் அறிவும் ஆராய்ச்சியும் எதனையும் உற்று நோக்கி எண்ணுதலும் அஞ்சா மன உறுதியும் விடாமுயற்சியும் வாய்ந்திருந்தமையே காரண மாகும். தாமிருக்கும் ஊரையும் அதற்கு அருகிலுள்ள வேறு சில ஊர்களையும் அன்றிச் சேய்மையிலுள்ளவைகளைச் சிறிதும் அறியாதவர்களாய் நம் இந்துமக்கள் மிடிப்பட்ட வாழ்க்கையில் ருக்க, மேல்நாட்டவரின் முன்னோர்களில் ஒருவரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/117&oldid=1584731" இலிருந்து மீள்விக்கப்பட்டது