உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் -18

பெண்களும் பலர். இவர்கள் என்றும் அவியாது ஒளிவிடும் நெருப்புள்ள தடவுகள் (தூபக்கால்கள்) ஏந்திய கையினராய் நெடுவழி நடந்து செல்கையில் இவர்களுடைய அடிகள் புண்பட்டதும் அல்லாமல், இவர்கள் தாம் சுமந்து சென்ற கோயில் தட்டு முட்டுகளாலும் மிகவும் களைத்துப் போனார் கள். இவர்களுக்குச் சிறிது முன்னே தன் குடும்பத்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற அலுவினியன் என்பான், இப்புனித மாதரார் அங்ஙனம் களைத்துத் தள்ளாடி வருதலைக் கண்டு நெஞ்சம் இரங்கித் தன் குடும்பத்தவரைக் கீழ் றக்கி க்கி விட்டு, இக்கன்னி மகளிரைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனன். ஒவ்வொருவரும் தம் உயிர் பிழைக்க ஓடும் அந்நேரத்தில் தன் நலத்தையும் குடும்பத்தினர் நலத்தையும் ஒரு சிறிதும் பாராது, இக்கன்னிமாரைத் தனது வண்டியிலேற்றிக் காண்டு சென்ற அவ் ஆண் மகனது அரிய இரக்கச் செயலைக் கேட்டவரெல்லாம் அவனைப் பெரிதும் வியந்து

இற

கொண்டாடினர்.

அவ்வாறு உரோம் நகரை விட்டுச் செல்லாதிருந்த வர்கள் பழைய அரசியல் சூழ்ச்சித் துணைவர்கள் எண்பதின் மரும் குருமார் சிலருமேயாவர். ஓடவலியற்ற சிலர் தாம் கவித்தலை மலைக் கோட்டையினுள் சென்று சேர்ந்தால், அங்கே போர் செய்ய வல்லவர்களாய் உள்ளார்க்குப் பயன்படும் அரிய உணவுப் பொருள்களில் தாமும் பங்குபெற நேரும் என உன்னித் தாம் அங்குச் செல்ல மனம் ஒருப் படாமல் பகைவரின் கத்திக்குத் தம்மை இரையாக்கித் தூது நெறி பிழைத்தாரால் தமது நாட்டுக்கு வந்த ஏதத்தை அவ்வாற்றால் நீக்கிவிடத் துணிந்தனர்! ஈதன்றோ தனக்கென வாழாத் தாளாளர் செயல்!

மூன்றுநாட் சென்றபின் காலவர்கள் முன்னேறிவந்து உரோம் நகரிற் புகுந்தனர். மதில்வாயில் பெருங்கதவுகள் திறந்தபடியாய் நின்றன; தெருக்களில் அரவம் ஏதுமே இல்லை; தெருக்களிலுள்ள இல்லங்களின் வாயிற் கதவுகளும் திறந்திருந்தன; ஆனால், அவ்வில்லங்களினுள் எவருமே காணப் படவில்லை. அதனால், அக்காலவர்கள் வெறும் தெருவு களினூடே விரைந்து நடந்து, அரசியல் மண்டபத்தில் போய்ச் சேர்ந்தனர். அம்மண்டபத்தில் உயர எழுப்பிய ஒரு பலகைமேல்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/157&oldid=1584771" இலிருந்து மீள்விக்கப்பட்டது