உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

சிறுவர்க்கான செந்தமிழ்

123

போருக்கு எழுந்தனர். “குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறு என்னும் பழ மொழிப்படி, போர்செய்யும் முன்னம் அவர்கள் நெஞ்சமே வலியழித்ததாயின், அவர்கள் காலவ ருடன் செய்த போரில் தோல்வி அடைந்தனரெனவும் வேண்டுமோ? உரோம் நகருக்குப் பதினோருகல் எட்டியுள்ள ‘அலியா' ஆற்றங்கரையில் காலவர்களால் முறிவுண்ட உரோமர்கள் சின்னபின்னமாய்ச் சிதைந்து பின்முதுகு காட்டித் தம்நகர் நோக்கி ஓடிவருகையில் பெரும்பாலார் தைபர் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டு அமிழ்ந்து இறந்தனர். எஞ்சிய மிகச்சிலரே தம் நகரில் வந்து சேர்ந்தனர்.

அங்ஙனம் முறிந்தோடிய உரோமர்களைக் காவலர்கள் உடனே பின் தொடர்ந்திருந்தனராயின், உரோமரென்ற பெயரும் உரோமரினமும் அவர்தம் கத்திக்கு இரையாகி அடியோடு அழிந்தும் போயிருக்கும். ஆனால், அக்கால வர்கள் அவர்களைப் பின் தொடராராய் அவர்களிடமிருந்து கொள்ளை கொண்ட பொருள்களைத் தாம் பங்கிட்டுக் காள்வதிலும் விருந்தாட்டு அயர்வதிலும் மூன்றுநாள் கழித்தனர். அதனால், உயிர் தப்பிய உரோமர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிகளை அம்மூன்று நாட்களிற் செய்து கொண்டனர். உரோமரின் படையாட்கள் கலைந்து போய் விட்டமையால் நகரத்தைப் பாதுகாக்கும் கருத்து எவர்க்குமே இல்லையாயிற்று. எஞ்சி நின்றவர்களில் மனத்திட்பம் உடையவர்கள் தாம் எடுத்துக் கொள்ளக் கூடிய பண்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கவித்தலை மலைக்கோட்டையில் போய்ச் சேர்ந்தனர். அங்ஙனம் அதனுட் சேர்ந்த உரோமர்கள், அதனைப் பகைவர்கள் வந்து தாக்குவரேல் அதனை முடிவு வரையில் தாம் காத்து நிற்ப தென்றே உறுதி செய்தனர். கலைந்துபோன தம் படைஞர்கள் இதற்கிடையில் மீண்டும் ஒருங்கு கூடிவந்து தமக்கு உதவி ஆற்றுதல் கூடுமெனவும், அல்லது காலவர்களே தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டபின் உரோம் நகரைவிட்டு அகலுவர் எனவும் அவர்கள் எண்ணினர்.

சண்டைசெய்ய வலியில்லாதவர்கள் உரோம் நகருக்குப் புறம்பே வெளியிலுள்ள ஓர் ஊரில் போய் அடைந்தனர். அவ்வாறு சென்றவர்களில் வெள்ளாடையுடுத்த கன்னிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/156&oldid=1584770" இலிருந்து மீள்விக்கப்பட்டது