உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் 18

வேண்டுவதைப் பிறர்பாலிருந்து கைக்கொள்வதே பழைய முறையுமாகும். எமக்கு வேண்டுவதைக் கொடாமல் வைத்துக் காள்ள வல்லர்கள் அங்ஙனமே அதனை வைத்துக் கொள்ளட்டும், பார்க்கலாம்,” என்று விடை கூறினான்.

காண்ட

அவன் கூறிய அம்மறுமொழியைக் கேட்டுச் சினம் அத்தூதுவர் மூவரும் குளூசியரிடம் சேர்ந்து கொண்டு காலவர்களுடன் போர்புரியத் தொடங்கினர். அம்மூவரில் ஒருவர் அக்காலவர் தலைவனைச் சேர்ந்த வலிய ஒருவனோடு தனிச் சண்டையிட்டு அவனைக் கொல்லு தலும் செய்தனர். தூதுவர்களாய்ச் செல்பவர்கள் தமக்குரிய கட மையை மீறி அங்ஙனம் ஒரு பக்கத்தவருடன் சேர்ந்து மறு பக்கத்தவரைத் தாக்குதல் ஆகாது. முறைகடந்த இச் செயலைக் கொடிய காலவர்களும் செய்தவர். அல்லர். ஆகவே, அவர் தலைவனான பிரான் தன் தூதுவர்களை உரோம் நகர்த் தலைவரிடம் போக்கித்... தூதுநெறி பிழைத்த அம்மூவரையும் தான் ஒறுத்தற்காக அம்மூவரையும் அவனிடம் ஒப்புவித்து ஒறுத்தல் தக்கதே - எனக் குருமார்களும் சூழ்ச்சித் துணைவர் களும் இசைந்துரைத்தனராயினும், அத்தூதுவரின் தந்தையார் அவர்களை அங்ஙனம் செய்தல் ஆகாதெனத் தடுத்து, இனி மூளும் போருக்கு அம்மூவருமே தலைவராய்நின்று படை செலுத்த வேண்டுமென வற்புறுத்தித் தம் புதல்வர் செய்த குற்றத்திற்கு உரோம் மக்கள் அனைவருமே உடன்படுமாறு சொல்லிவிட்டனர்.இதனால் உரோமர்கள் எல்லார்க்குமே ஓர் அலைப்பு வந்தது.

டை

முறைசெய்யத் தவறிய உரோமர்கள்மேற் காலவர்கள் கடுஞ்சினமும் சீற்றமும் கொண்டனர்; அதனால் தாம் புகுந்த வடக்கிடங்களில் கொள்ளையிடுதலை விட்டு, உரோமர் களைத் தவிர வழியிலுள்ள ஏனைக் குடியரசுக்கெல்லாம் தாம் நண்பரே எனப்புகன்று, நேரே உரோமரைத்தாக்குதற்கு மிக விரைந்து போந்தனர். உரோமர்கள் தாம் முறைபிசகி நடந்ததை உன்னி வருந்தினராய்க், கடுகெனத் தம்முடைய படைகளைத் திரட்டலாயினர். தாம் போர்க்குச் செல்லுமுன் கடவுளர்க்கு வழிபாடு செய்யும் வழக்கத்தினராயிருந்தும் தாம்தம் குருமார் சொல்லைக் கேளாமல் நடந்தமையால், உரோமர்கள் இப்போது கடவுள் வழிபாடு செய்யாமலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/155&oldid=1584769" இலிருந்து மீள்விக்கப்பட்டது