உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

121

அங்ஙனம் தாம் பாழ்செய்த ஊர்களில் தாம் குடியேறியும் வந்தனர். இங்ஙனம் இத்தலிக்கு வடக்கே பெருந்தீது இழைத்து வந்தவர்களாகிய காலவர்களும், அதற்குத்தெற்கே ஆற்றலிலும் உழைப்பிலும் நாகரிகத்திலும் மேன்மேல் ஓங்கித் தனியரசு புரிந்த உரோமர்களும் கடைசியாக ஒருவரையொருவர் எதிர்க்கும் காலம் அண்மிற்று. பழைய உரோமர்களைத் தேவர்களாகக் கொண்ட வடமொழிப் புராண நூலார், வ்வுரோமர்கள் மேற்படை திரண்டு வந்து அவர்கட்குப் பெருந்தீது செய்த காலவர்களையே 'காலகேயர்' என்னும் அரக்கர் க்கர் கூட்டமாகக் கருதிக் கதையெழுதி வைத்தனர். அது

நிற்க.

மேற்சொன்ன கொடிய காலவர் கூட்டத்திற்குப் பிரான் எனப் பெயரிய ஒருவன் தலைவனாய் நின்றனன். இவன் பிறர் எவரிடத்தும் காணப்படாத ஒரு தனித்திறமை வாய்ந்தவன். இவன் தன் கூட்டத்தில் ஒரு பெரும்பகுதியினரைப் படைஞ ராகத் திரட்டிக்கொண்டுவந்து, இத்தலியின் வடக்கில் இருந்து 'குளூசியம்' என்னும் பட்டினத்தைத் தாக்கினான். அப்பட்டினத்தில் உள்ளவர்கள் அக்கொடிய பெருங்கூட்டத் தவர்களைத் தனியே எதிர்க்கமாட்டாதவர்களாய், உரோம் நகரிலுள்ள அரசியல் தலைவர்கள் தமக்குத் துணைப்படை யொன்று விடுத்து உதவி செய்யுமாறு கேட்டு அவர்கட்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கிசைந்து அத்தலைவர் களும் அரச குடும்பத்திற்சேர்ந்த மூவரை முதலில் அவர்கள் பால் தூதாகப் போக்கினர். தூதுபோன மூவரும் அக்காலவர் தலைவனான பிரானிடம் சென்று, “தம்மட்டில் அமைதியாக வாழ்க்கை செலுத்திவரும் குளூசிய நகரத்தார்மேல் நீங்கள் ஏன் வலிந்து வந்து போர் தொடுக்கின்றீர்கள்? அவர்கள் தங்கட்கு யாது தீங்கு செய்தனர்?” என வினவினர். அதற்கு அப்பிரான் தலைவன், “குளூசியர்கள் கொழுமையான நிலங்கள் வைத்திருக் கின்றனர். அந்நிலங்கள் காலவர்களாகிய எங்கட்கு வேண்டும். அவற்றை எங்கட்குக் கொடாமல் அவர்கள் தாமே வைத் திருப்பதே எமக்குத் தீங்கு செய்வதாகும். உரோமர்களாகிய நீங்களும் இங்ஙனமே அயலவர் நிலங்களைக் கைப்பற்றினீர்கள் அல்லிரோ? ஆதலால், யாம் அங்ஙனம் செய்வது கொடுமையும் அன்று. முறைதவறியதும் அன்று. எவர் வலியரோ அவர் தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/154&oldid=1584768" இலிருந்து மீள்விக்கப்பட்டது