உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் 18

விளைந்து, அறுப்பு அறுத்து விளைபொருள்களைத் தாகுத்துக் கொள்ளும் காலங்களில், உரோமர்க்கும், அச்சிறு குடியரசுகளுக்கும் போர் மூள்வதுண்டு. அப்போது அரசியல் தலைவர்கள் தீர்மானம் செய்தபடி, மேற்சொல்லிய கவித்தலை மலைக் கோட்டையில் உரோமர்கள் தம் பெண்டிர் பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் பாதுகாத்து வைத்துத் தம் பகைமேற் செல்வர். அங்ஙனம் பகைமேற் செல்லும் காலங்களிலெல்லாம் உரோமர்கள் வெற்றி யடைபவர் அல்லர். ஆனாலும், தோல்வியடைந்ததனால் மனவெழுச்சி அவிந்து போகாமல் அவர்கள் மேலும் மேலும் பகைவரை விடாமல் தாக்கிக் கடைப்படியாக வாகைமாலை சூடுவர். இங்ஙனம் பண்டை உரோமர்கள் தமது நகரத்தின் பால் அளவிறந்த பற்றுவைத்துத் தமக்குள்ள ஒற்றுமையும் அன்பும் மிக்கு அஞ்சா ஆண்மையினராய் எதிர் நின்று கடும்போர் புரிந்து வந்தமையால், அவர்கள் சிலகாலத்தில் தமக்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் ஒருங்கே வென்று, தமது அரசாட்சியினை இத்தலி தேயத்தின் நடுப்பகுதி எங்கும் வீசிவிளங்கச் செய்தனர்.

இவ்வாறாக ஒருநானூறு ஆண்டுகள் வரையில் உரோமர்களின் அரசு தனக்கு ஒப்பதும் மிக்கதுமின்றித் தனிச்சிறப்பு வாய்ந்து துலங்கிற்று. இத்துணைப் பேராற்றல் படைத்த இவ்வரசுக்கும் பின்னர் ஒருபெருங் கொடும்பகை தோன்றிற்று. காலவர் (Gauls) என்னும் மலைநாட்டவர் கூட்டம் ஒன்று நாளுக்குநாள் ஐரோப்பாப் பெருநிலப் பிரிவின் நடுப் பகுதியில் பெருகி வந்தது. இவர்கள் நீளமான கைகால்களும் செம்பட்டை மயிர்களும் உடையவர்கள்; நீண்டுயர்ந்த வலிய யாக்கை வாய்ந்தவர்கள்; அஞ்சா நெஞ்சினர்கள்; ஆலூப்பு (Alps) மலைகளையே தமக்கு உறைவிடமாய்க் கொண்டவர்கள். இத்தலிதேயத்தின் வடக்கிலுள்ள வயல்நிலங்கள் நன்கு விளைந்து பயன் தரும்காலங்களில் இக்காலவர்கள் அங்கே புகுந்து கொழுவிய விளைபொருள்களைக் கொள்ளை காண்டுபோகத் தொடங்கிய தல்லாமலும், தாம் புகுந்த அந்நாடுகளில் உள்ள ஊர்களைக் கொளுத்தியும், அவ்வூர் களிலிருந்த மக்களைப் படுகொலைசெய்தும், அங்குள்ள ஆடு மாடுகளைக் கவர்ந்தும் பெருங்கேடு செய்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/153&oldid=1584767" இலிருந்து மீள்விக்கப்பட்டது