உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

119

களுக்கு இடையே பச்சைப்பசேலெனக் கொழுமையாய் விளங்கும் காட்சியானது பொற்றகட்டின் நடுவே பதிக்கப் பட்ட முழுப்பச்சை மணியைப் போல் சேய்மையிலிருந்து காண்பார்க்குத் தோன்றா நிற்கும். இவ்வாறு உரோமர்கள் தமது விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் நாளடை வில் பெருஞ் செல்வத்தை அடையலாயினர். அதனால், அந்நகரமானது மிக அழகிய ஏழடுக்கு மாளிகைகளால் வரவரப் பெருகலாயிற்று. இங்ஙனம் நாளுக்குநாள் செல்வத்திலோங்கி வந்த இந்நகரத்தின்கண்ணே கவித்தலை (Capitol) என்னும் ஒரு பாறைமலை உளது. அம்மலையின் உச்சியிலே மிகவும் வலிவான ஒரு கோட்டையும் அக்கோட்டையின் நடுவே சிவத்த (Jupiter)க் கடவுளுக்கும் அவர்தம் தேவியாரான சிவனை (Juno) அம்மைக்கும் எடுப்பித்த சிறந்த திருக்கோயிலும் அமைக்கப் பட்டுத் திகழ்ந்தன. இம்மலைக் கோட்டையே உரோம் நகரத்திற்குப் பெரியதோர் அரணாய் வயங்கிற்று.

அப்பழையநாளில் உரோமர்களுக்குத் தனி அரசன் இல்லை. அவர்கள் தம்மால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரைத் தலைவராக நிறுத்தி, அவர்களைக் கொண்டு செங்கோல் செலுத்தி வந்தார்கள். ஆகவே, அவர்களது அரசு குடியரசு என்றே சொல்லல் வேண்டும். உரோமர்கள் தம் அரசியல் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் இடம், அந்நகரத்து மக்கள் ஒருங்கு திரளும் அங்காடி (சந்தை)ப் பக்கமே ஆகும். அங்ஙனம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாட்களில் மட்டும், அவர்கள் தாம் உழவுத் தொழில் செய்யுங்கால் மேற் கொண்டிருந்த பரும்படியான உடைகளைக் களைந்தெறிந்து, விளிம்புகளில் ஊதாக் கரையுள்ள வெண்மையான வேறு ஆடை பூண்டு தொகுதி தொகுதியாகச் செல்வார்கள்.

இவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ருவரும், யானைமருப்பிற் செய்த அரியணை மீது அமர்ந்து அரசு செலுத்துவர். கோடரிகோத்த கோல்களைச் சேர்த்துப் பிணைத்த கட்டுகள் ஏந்திய கையினராய் மெய்க் காப்பாளர் சிலர் இத்தலைவர்களுடன் அருகுசெல்வர், அருகுநிற்பர். இவ்வுரோம் நகரத்தையடுத்துச் சூழ வேறுசில சிறுசிறு குடியரசு நாடுகளும் இருந்தன. அந்நாடுகளிலிருந்த மக்களும் ஏறக்குறைய உரோம் நகரத்து மக்களை ஒத்த பழக்க வழக்கங்கள் வாய்ந்தவர்களே, என்றாலும், வயல்நிலங்கள் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/152&oldid=1584766" இலிருந்து மீள்விக்கப்பட்டது