உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 18

46. கவித்தலை மலைக்கோட்டை

இவ்விந்திய நாட்டுக்கு மேற்கே நெடுந்தொலைவு கடல் தாண்டிச் சென்றால் இத்தாலி தேயத்தின் தலைநகராயுள்ள உரோம் பட்டினத்தை அடையலாம். இது தைபர் என்னும் ஆற்றங்கரையில் மிகவும் அழகியதாக அமைந்திருக்கின்றது. இதனைச் சூழவுள்ள மேல்நாடுகளிலும் இதன்கண்ணும் வாழும் மக்கள் பெரும்பாலும் நம் ஆங்கில மக்களைப் போல் வண்மைநிறம் மிக்கு நீண்டுயர்ந்த திண்ணியயாக்கை வாய்ந்தவர்களாய் நாகரிகத்திற் சிறந்து விளங்குதலால், இவர்களை நம் பண்டைத் தமிழ் மக்கள் 'தேவர்கள்' என வழங்கி வந்தனர். பண்டிருந்த நம் பாண்டிய மன்னன் ஒருவன், அந்நாளில் உரோம் நகரின்கண் அரசு வீற்றிருந்த அகத்திய (Augustus) வேந்தனுக்குத் தூதுவிடுத்த செய்தியைக் குறிக்கும் ஒரு கல்வெட்டானது, பாண்டியன் தேவர்கள் பால் தூது ரு விடுத்தனன் என்றே நவில்கின்றது. ஆகவே, மேல்நாட்ட வர்கள், இங்கிருந்த நம் முன்னோர்களால் தேவர்களாகவே கருதப்பட்டமை தெற்றென விளங்குகின்றதன்றோ? இங் ஙனம் தேவருலகாகக் கருதப்பட்ட அம்மேனாட்டின் தலை நகரான உரோம் பட்டினத்தில் இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அரியபெரிய ஒரு நிகழ்ச்சியை இங்கெடுத்துக் கூறுவோம்.

உரோம் நகரமானது முதன்முதல் உண்டாகியபோது அதிலிருந்த மக்கள் செல்வம் உடையவர்கள் அல்லர். ஒவ்வொருவர்க்கும் இரண்டு மூன்று காணி நிலங்கட்கு மேல் வேறில்லை. அந்நிலங்களை அவர்களே தாமும் தம் குடும்பத் தவருமாகத் திருத்திப் பயிரிட்டு, அவற்றின் விளைவைக் கொண்டு வாழ்க்கை செலுத்தி வந்தனர். அந்நகரத்தைச் சூழவுள்ள வயல் நிலங்களும், ஆடுமாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களும் நாற்புறமும் சுற்றியிருக்கும் மலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/151&oldid=1584765" இலிருந்து மீள்விக்கப்பட்டது