உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

117

தின்றுவந்த வந்த எளிய உணவுகளை இகழ்வாய் நினைத்து, இப்போது தனக்குக் கிடைத்த கொழுவிய பண்டங்களைத் தின்று இன்புற்றபடியாய் இருந்தது.

L

இங்ஙனம் அவ்விரண்டும் இருக்கையில் திடீரென அவ் வுணவுச் சாலையின் கதவுகள் திறந்தன. உடனே உண் டாட்டுக் கூட்டம் ஒன்று உள்ளே புகுந்தது. அங்ஙனம் புகுந்த அக்கூட்டத்தவரைக் கண்டு வெருக்கொண்ட அவ்விரண்டு எலி நண்பர்களும் பெருந்திகிலுடன் கீழே குதித்தோடி அண்டையிற் கிடைத்த ஒருமூலையில் பதுங்கின! பின்னர் அவை அச்சாலையின் வெளியே போய் விடுவதற்கு நகர்ந்து செல்லப், புறத்தே இருந்த நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டு, அவைமேலும் பேரச்சங்கொண்டு திரும்பவும் உள்ளே செல்லலாயின. கடைசியாக அங்கு நடைபெற்ற உண்டாட்டு முடிந்து அரவம் அடங்கினபின், அந்நாட்டெலி தான் ஒளிந் திருந்த இடத்தைவிட்டுப் புறத்தேவந்து, “ஓ, என் அன்புள்ள நண்பனே, இந்த நாகரிக வாழ்க்கை அதனை விரும்புவார்க்கே தக்கது. அச்சமும் கவலையும் சூழக் கொழுவிய உணவுகளை உட்கொள்ளுதலினும், அச்சமின்றி அமைதியாய் அரிசிச் சோறு உண்பதே மேலானது” என்று சொல்லிவிட்டுத் தனது நாட்டுப்புற வீட்டிற்குச் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/150&oldid=1584764" இலிருந்து மீள்விக்கப்பட்டது