உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 18

இருக்கையிலேயே நாம் எவ்வளவு இன்பத்தை நுகர வேண்டுமோ அவ்வளவும் நுகர்ந்துவிடல் வேண்டும். நம் எலியினமானது நீண்டநாள் உயிர்வாழ்வதில்லையே! ஆதலால், நீ என்னுடன் வந்தால் வாழ்க்கையின் நலத்தையும் நகர வாழ்க்கையின் சிறப்பையும் நினக்குக் காட்டுவேன்” என நவின்றது.

அவ் இனியசொற்களினாலும் சுயமான அதன் தன்மை யினாலும் உள்ளம் கவரப்பெற்ற அந்நாட்டெலி அதனுடன் செல்லுதற்கு இசையவே, இரண்டும் ஒன்றுசேர்ந்து நகரத்தை நோக்கிச் சென்றன. அவை மறைவாக நகரத்தினுள் நுழைந்த நேரம் மாலைப் பொழுதாகும். அந்நகரத்தெலி தான் இருக்கும் வீட்டினுள்ளே அதனை அழைத்துப் போதற்கு நள்ளிரவாயிற்று. அவ்வீடோ செல்வர் ஒருவர்க்கு உரிய தாதலால், அதன் உள்ளகன்ற சிறந்ததோர் உணவுச் சாலையில் பஞ்சுவைத்துப் பல்நிற மென்பட்டுத் தைத்த நாற்காலிகளும் கட்டில்களும் கம்பளி விரித்த மேசைகளும் டப்பட்டிருந்தன; வெள்ளிய யானைக் கொம்புகளை ஈர்ந்து செய்த கலங்களும், இன்னும் இவை போலச் செல்வத் தின் செழுமையைக் காட்டும் ஏனைப் பண்டங்களும் ஆங் காங்கு அழகுற வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மேசை களின் மேல் மிகச் சிறந்த உணவுப் பொருள்கள் ஓர் உண் டாட்டின் பொருட்டுப் பல கடைகளிலிருந்தும் திரட்டிக் கொணர்ந்து வெள்ளித் தட்டுகளிலும் வெள்ளிப் பாண்டங் களிலும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டுத் துலங்கின.

L

இப்போது நாகரிகமுள்ள அந்நகரத்தெலி தன் நண்ப னுக்கு விருந்து செய்யத் துவங்கி, அதனைப் பட்டுமெத்தை மேல் அமரச் செய்து, தான் அங்கு இங்குமாய் ஓடி, ஒவ்வொரு தட்டிலும் கலத்திலும் உள்ள கொழுமையான உணவுப் பண்டங்களை எல்லாம் முதலில் தான் ஒவ்வொன்றாய்ச் சுவை பார்த்து, மணமும் இனிமையும் மிகுந்தவைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வந்து அதன் முன்னே வைத்து, அவை களைத் தின்னும்படி வற்புறுத்தியது. நாட்டெலியோ தன் இல்லத்தினுள் இருப்பது போல் காட்டிக் கொண்டு தனக்குச் சடுதியில் வந்த இந்நல்வாழ்வை எண்ணித் தனக்குள்ளே மகிழ்வதாயிற்று. தான் தனது நாட்டுப்புற வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/149&oldid=1584763" இலிருந்து மீள்விக்கப்பட்டது