உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

115

45. நாட்டு எலியும் நகரத்து எலியும்

வவ

நாட்டிலே உயிர் லே உயிர்வாழ்ந்த ஓர் எலியானது தனக்கு நேயமாய் உள்ள ஒரு நகரத்து எலியைத் தான் இருக்கும் ஒரு குடிசைக்கு வரவழைத்தது. நாட்டெலியானது கள்ளம் அற்றதாயும் நாகரிகம் குறைந்ததாயும் செட்டாகவே வாழ்க்கை செலுத்துவதாயும் இருந்தாலும், விருந்து வந்த தன் பழைய நண்பனிடத்தில் எவ்வளவு சிறப்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவும் நடந்து, தன்னிடம் உள்ள உணவுப் பண்டங்களை எல்லாம் ஒளியாமல் அதன் முன்னே கொணர்ந்து வைத்தது. தன் நண்பனான நகரத்தெலி நகரத்திலுள்ள உயர்ந்த னிய உணவுப் பொருள்களைத் தின்று சுவை கண்டதாத லால், அதன் நாவுக்குத் தான் படைக்கும் நாட்டுப்புறத்துப் பொருள்கள் இனிமை தாரா என அஞ்சிச் சுவையிற் குறைந்த அவைகளை அளவில் மிகுத்துப் படைத்தால் அது மனம் மகிழும் எனக் கருதி, அப்பண்டங்களை மிகுதி மிகுதியாகக் கொணர்ந்து அதன் முன் வைத்தது. நகரத்து எலியோ தனக்கு அவை பிடியா வாயினும் தன் நண்பன் பொருட்டு வேண்டா விருப்பாய் அதில் சிறிதும் இதில் சிறிதுமாக அப்பண்டங்கள் ஒவ்வொன்றையும் கடித்துக் கொறித்தது; நாட்டெலியோ தன் நண்பன் எதிரே இருந்து வாற்கோதுமை வைக்கோலை மட்டும் கொறித்தது.

மலைப்

அதனைக் கண்ட நகரத்தெலி, “நண்பனே, நாகரிகமும் கிளர்ச்சியும் இல்லா வ்வாழ்க்கையை நீ எங்ஙனம் பொறுத்துக் கொண்டிருக்கின்றாய்? இண்டு இடுக்குகளில் உறையும் தேரையைப் போல் தனித்த இம் பாறைகளிலும் காடுகளிலும் நீ இருக்கின்றனையே! வண்டி களும் மக்களும் குழுமிய நகரத்தின் தெருக்களுக்கு இம் மலைகளும் காடுகளும் ஒப்பாகுமா? நீ வீணே இங்கிருந்து நின்வாழ் நாளைத் துன்பத்தில் கழிக்கின்றாய். உயிரோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/148&oldid=1584762" இலிருந்து மீள்விக்கப்பட்டது