உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் 18

44. சேவலும் கழுகும்

சினங் கொண்டு போர் புரியும் இரண்டு ஆடவரைப் போல், இரண்டு சேவல்கள் பெருஞ்சீற்றத்துடன் நெடுநேரம் இ சண்டையிட்டன. கடைசியாகத் தோல்வியடைந்த சேவல் ஒரு கோழிக் கூட்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது. வெற்றியடைந்த சேவலோ, ஒரு வீட்டின் கூரைமேற் பறந்து சன்று வைகித், தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறியாகத் தன் செப்பட்டைகளை அடித்துக் கொண்டு, பெருங் கிளர்ச்சி யுடன் கொக்கரித்தது. அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் பறந்து வந்த ஒரு கழுகு தன் காலின் நகங்களால் அச்சேவலை அறைந்து இறாஞ்சிக் கொண்டு போயிற்று. ஒளிந்திருந்த மற்றைச் சேவலானது அதன்பின் அச்சமின்றி வெளியே போந்து, தான் போராடிய இரையை மகிழ்வுடன் பொறுக்கித் தின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/147&oldid=1584761" இலிருந்து மீள்விக்கப்பட்டது