உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

135

பழக அவன் அஞ்சா நெஞ்சினன் ஆகின்றான். மேலும், எந்தத் துன்பத்தையும் துன்பமாகக் கருதாமையால் எத்தகைய இடர்வரினும் அதனைப் பொறுக்கவும் கற்றுக்கொள்கின்

றான்.

இறப்பில்லாக் கடவுள் நமதுள்ளத்தைத் தாற்றுக் கோல் இட்டு எழுப்புவது போல், வருவிக்கும் இடர்களைக் கண்டு வருக் கொளாதேயுங்கள்! ஏனென்றால், தீதுவரும் காலத்திலேதான் ஒருவனது உள்ளத்தின் நன்மை புலனா

கின்றது.

நிறைந்த ஐம்பொறியின்பத்தில் சிக்கி அறிவுமயங்கி யிருப்பவர்களை நல்லவினையற்றவர்களென்றே சொல்லல் வேண்டும். ஏனெனில், அவர்கள் அவ்வின்ப வயப்பட்டு அறிவின் சுருசுருப்பிழந்து அதன்கண் ஆழ்ந்து விடுகின் றனரல்லரோ? அத்தன்மையினர்க்கு ஏதேனும் இடர்வரின் அவர் அதனைத் தாங்கார். மெல்லிய கழுத்துடையது நுகத் தடியைத் தாங்குமோ?

கடவுள் தாம் அன்பு பாராட்டும் அடியர்க்காகப் பலவகை அல்லல்களில் படுப்பிக்குமாற்றால், அவர்களைப் பழக்கி உரமேற்றி உறுதிப்படுத்துகின்றார்.

சிறுவர்க்கான செந்தமிழ்

- முற்றும் –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/168&oldid=1584782" இலிருந்து மீள்விக்கப்பட்டது