உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

  • மறைமலையம் -18

அன்றோ?” என வினவினான். உரோமரைப் படை திரட்டி வந்த காமிலியன், “யான் இல்லாத வேளையில் செய்த உடன்படிக்கை செல்லாது; எவரும் அது செய்தற்குரியரல்லர்” என வற்புறுத்திக் கூவினான். அதனால், காலவர்க்கும் உரோமர்க்கும் போர் மூண்டது. உரோமரது படைஞர் நாற்பதினாயிரம் பேர் மேலுக்கு மேல் வந்தமையால், பசியாலும், நோயாலும் மெலிந்த தன் படைஞர் அத்துணைப் பெரிய படையை எதிர்த்தல் இயலாதென்று கண்ட பிரான், தன் காலவர் கூட்டத்தை அழைத்துக் கொண்டு மறுநாள் விடியற்காலையிலே காமிலியன் நகரைவிட்டுப் பின்னிடைந்து ஏகினான். ஆனால், காமிலியன் அவனையும் அவன் படைஞரையும் விடாது பின்தொடர்ந்து தாக்கி, உரோமிலிருந்து எட்டுக்கல் வரையில் காலவர்களைக் கொன்று குவித்துப் பெருவென்றி எய்தினான்.

ளி

கொடியரான காலவரது படையெடுப்பினால் ஒளி யிழந்த உரோம் நகரும், நாடும், அப்பேரிருள் ஒழிந்தபின் முன்போல் பேரொளிமிகுந்து துலங்கலாயிற்று. அப்பேரிடுக் கண் நேர்ந்த காலத்தில் செயற்கருஞ்செயல் செய்த அலு வினியன், பேவியன்றார்சன், கோமினியன், மானிலியன், காமிலியன் என்னும் அருந்திறலாளர்க்கெல்லாம் உரோமர் கள் பெருஞ்சிறப்புகள் செய்து அவர்களைப் கொண்டாடினர் என்க.

பரிது

ஆயிரத்துத் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன் கு திருவள்ளுவர் காலத்திருந்த மேல்நாட்டாசிரியர் செனீகரின் அறிவுமொழிகள்:

பலகாலும் காற்றினால் அலைக்கப்படாத எத்தகைய மரமும் வலுவாய் உறுதியாய் நிலைப்பதில்லை; ஆனால் அடுத்தடுத்துக் காற்றினால் அசைக்கப்படும் மரமோ உரம் ஏறப்பெற்று நிலத்திலே அழுத்தமாக வேர் ஊன்றுகின்றது.

நாற்புறமும் அடைப்பாக உள்ள பள்ளத்தாக்குகளில் வளரும் மரங்கள் எளிதிலே முறிந்துவிடும் இயல்பின. ஆகவே, அச்சத்துக்கு ஏதுவாக நிகழ்ச்சிகளின் நடுவே உயிர்வாழப் பெறுவதே நல்லோன் ஒருவனுக்கு நன்மையை அளிக்கின்றது; ஏனென்றால் அவற்றின் நடுவிலிருந்து பழகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/167&oldid=1584781" இலிருந்து மீள்விக்கப்பட்டது