உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

133

தம்மவர் தொடர்ந்து முற்றுகை செய்திருத்தல் பயன்தராவென எண்ணினான். எண்ணி அவர்களுடன் ஒத்துப் போகும் கருத்துடையனாய், அவர்களின் தலைவர்பால் ஒரு தூதுவனை விடுத்தான். அதற்கிசைந்து அவர்கள் சொல் விடுப்பவே, பிரான் அம்மலைமேற்போந்து அத்தலைவரில் ஒருவருடன் அமைதி பேசி, அவர்கள் தனக்கு முந்நூற்று முப்பத்துமூன்று வீசை எடையுள்ள பொன்னை நிறுத்துத் தந்தால், தான் தம்மவருடன் உரோமருடைய நகரத்தையும் நாட்டையும் விட்டுப் போய்விடுவதாக உறுதிமொழி புகன்றான். அதற்கு அவ்வுரோம் தலைவர் இணங்கவே, காலவர் தம்மிடம் இருந்த வீசைக் குண்டுகளைக் கொண்டுவந்தனர். உரோமர்கள் தம்மவர் பாலிருந்து திரட்டிக் கொணர்ந்து தொகுத்த பொற்பணிகள் காவலர் கொணர்ந்த எடையினும் மிகுதியாக இருந்தன. அப்பொற்குவியலைக் கண்ட பிரான் அவ்வளவையும் தான் கவர்ந்துகொள்ள அவாக்கொண்டு, தூக்குத்தட்டில் எடை குண்டொடுகூட நிறைமிகுந்த தனது கொடுவாளையும் இட்டான். அதுகண்ட உரோமர்கள் கேட்ட அளவுக்குமேல் பொன் கொடுக்க இசையோமென மறுக்கக் காலவர்களும் உரோமர் களும் பெரும் சீற்றத்துடன் வழக்குப் பேசலாயினர்.

வர்கள் இவ்வாறு வழக்காடிக் கொண்டிருக்கையில், கீழிருந்த காலவர் குழாத்திலிருந்து ஒரு பெருங்கூக்குரல் மேலெழுந்தது. அதனையடுத்துக் காமிலியனைத் தலைவ னாய்க் கொண்டு உரோமரது பெரும்படையொன்று மலை மேல் பாட்டையில் ஏறிவந்தது. அதைக் கண்டதும் அக் கவித்தலை மலைக்கோட்டையிலிருந்த உரோமர் அனை வரும் பெருங்களிப்பும் பெருங்கிளர்ச்சியும் உடையராகி, அங்கே தாம் கொணர்ந்து குவித்த பொற்றிரளையெல்லாம் மீண்டும் தமது களஞ்சியத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கும்படி, தம்மவர்க்குப் பணித்தனர். பணித்தனர். அவர்களின் தலைவரும் பிரானை நோக்கி, “உரோமர்கள் தமது நாட்டை இருப்பினாற் காப்பவரேயல்லால் பொன்னினாற் காப்பவரல்லர்" என்று ஆண்மையுடன் கூறினர். அதுகேட்ட பிரான், “செய்து கொண்ட உடன்படிக்கையில் வழுவிக் கொடுக்க இசைந்த பொன்னைக் கொடாது மறுத்தல் நம்பிக்கைக்கு மாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/166&oldid=1584780" இலிருந்து மீள்விக்கப்பட்டது