உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் 18

அவ்விரவில் பகைவர்களுக்குத் தப்பித் திரும்பிச் செவ்வனே அவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கக் கூடுமா என்று அவ ரெல்லாரும் ஐயுற்றுக் கலங்கினர். அவன் அச்செங்குத்தான பக்கத்தே ஏறி மேல்வந்த அடையாளத்தைக் கண்டன்றோ காவலரும் அவ்வழியே ஏறித் தம்மைத் தாக்க வந்தனரென்று உரோமர்கள் நினைத்தனர்; அதனால் அவன் அவர்களால் பிடிபட்டிருப்பனெனவே அவர்கள் கருதலாயினர்.

ங்ஙனம் எல்லாம் கலங்கிக்கொண்டிருக்கையில் அவர்களுள் ஒருவற்கு ஒரு கனவு தோன்றிற்று. அம்மலைத் தலைக்கோயிலில் உள்ள சிவத்தர் என்னும் கடவுளின் திருவுருவம் அவன் முன்னே தோன்றியது. தோன்றிய அஃது அவனை நோக்கி, “நீங்கள் எல்லீர்க்கும் உணவாக மிச்ச மிருக்கும் கோதுமைமா அவ்வளவும் எடுத்து அப்பமாகச் சுட்டுக் கீழே சூழ்ந்துகொண்டிருக்கும் தங்கள் பகைவர்களின் நடுவே அவ்வப்பங்கள் எல்லாவற்றையும் எறிந்து விடுங்கள்!” என்று கட்டளையிட்டு மறைந்து போயது. சிறிதிருக்கும் உணவையும் இங்ஙனம் எறிந்துவிடின் எவ்வாறு உயிர் பிழைப்பதென அங்கிருந்த உரோமர் அனைவரும் எண்ணின ரேனும், அச்சிவத்தப் பெருமான் கட்ட ளையை மீற

எவரும் உள்ளம் துணிந்திலர். உயிர் ஒழிந்தாலும் இறைவன் கற்பித்தபடி செய்வதே தக்கதென அவரெல்லாரும் ஒருங் கியைந்து, தம்மிடம் மிச்சமாயிருந்த மாவையெல்லாம் எடுத்துப்பிசைந்து அப்பமாகச் சுட்டுச், சுட்ட அப்பங்களை எல்லாம் கீழுள்ள பகைவரது குழுவில் வீசினர். மேலிருந்து கீழ்விழுந்த அவ்வப்பங்களைப் பசியால் வாடிவதங்கித் தத்தளிக்கும் தமது பசிவருத்தம் கண்டு இரங்கிப் பகைமை பாராது உணவு தந்த அவ்வுரோமர்கள் பால் நன்றியும் அன்பும் இயற்கையாகவே தம்முள்ளத்தே கொள்ளப் பெற்றனர்.

த்

அதுவேயுமன்றி அக்காலவர் தலைவனான பிரானும் தம்மவர் அத்தனை பேர்க்கும் அத்தனை மிகுதியான உணவு தந்த உரோமர்கள் இன்னும் எவ்வளவு மிகுதியான உணவுப் பண்டங்கள் வைத்திருக்க வேண்டும்! அவ்வளவு மிகுந்த உணவு வைத்துக் கொண்டு மலைமேல் கோட்டையில் வலியரா யிருக்கும் அவர்களைக் கீழே உணவின்றிப் பசித்து வருந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/165&oldid=1584779" இலிருந்து மீள்விக்கப்பட்டது