உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

131

உரோமர்க்கு அங்கிருந்த சிவனையம்மை கோயிலிலிருந்து ஒரு முன்னறிவிப்பு எழுந்தது. அவ்வம்மைக்கு நேர்ந்து கொண்டு அக்கோயிலில் விட்டு வைத்திருந்த தாராப் பறவைகள் எங்ஙனமோ அவ்வேற்று ஆட்களின் வருகையை அறிந்து தம் இறக்கைகளை அடித்துக் கொண்டு கத்திக் கெக்கெலி செய்து பேரொலியை உண்டாக்கின. தாம் கடும்பசியால் வாடிவதங்கும் காலத்தும் உரோமர்கள் அப்பறவைகள் அம்மைக்காக விடப்பட்டன வென்று அன்புடன் கருதி அவற்றைத் தாம் உணவுக்காகக் கொல்லாது விட்டு வைத்தமையாலன்றோ அவர்கள் இப்போது அப்பறவையினங்களால் காக்கப்படு வராயினர்? அவை செய்த பேரிரைச்சலைக் கேட்டு அங்கே உறங்கிக் கிடந்த உரோமர்கள் உடனே விழித்துக் கொண்டனர். விழித்துக்கொண்டவர்களில் ‘மானிலியன்' என்பவனே உற்ற நேரத்தில் முதன்முதல் விரைந்து போந்து, அக்கோட்டையின் புறமதிலில் அப்போதுதான் ஏறி வந்து கால் வைத்த காலவர்களைத் தாக்கினான். அவன் முன்னதாக வந்து நின்ற காலவன் ஒருவன் ஒருவன் வெட்டுதற்குத் தனது மழுப்படையை ஓங்கிய காலையில், அம்மானிலியன் தன் கைவாளால் அவனது கையைத் துணித்துப், பின்னர் னையும் அச்செங்குத்தான மலைப்பக்கமாய்க் கீழே தள்ளிவிட்டான். வீழ்ந்தவன் பின்னே ஏறிவரும் காலவனையும் அங்ஙனமே தாலைத்தற்கு முனைந்து மானிலியன் அம்மதின்மேல் தனிநின்றான். இதற்குள்ளாகக் கோட்டையின் உள்ளிருந்த படை ஞர்கள் அத்தனை பேரும் காலவரை எதிர்தாக்குதற்கு மதிலண்டை வந்து சேர்ந்தார்கள். ஏறிவந்த காவலரெல் லாரும் உடனே கீழ் வீழ்த்தப் பட்டனர். மதின்மேல் தன் காவலில் கருத்தின்றி உறங்கிய படைஞனையும் உரோமர்கள் உருட்டிக் கீழே தள்ளிவிட்டனர். தனிநின்று காலவரை மதின்மேல் எதிர்த்துத் தொலைத்த மானிலியன்பால் படைஞரெல்லாரும் நன்றி மிக்கவராய்த் தாம் மிகுத்து வைத்திருந்த அரிய சிறிது உணவினையும் பருகு நீரினையும் கொணர்ந்து தந்தனர்.

அவ

இந்நேரத்தில் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் நிலை கவலைக்கு இடமாகவேயிருந்தது. கீழூர்களிலிருக்கும் தம்மவர் பாலிருந்து தூதுவந்த கோமினியன் இருண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/164&oldid=1584778" இலிருந்து மீள்விக்கப்பட்டது