உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் -18

காண்ட கோமினியன் சிறிதும் தாழாது அவ்விரவே அம் மலையை விட்டுப் பெரியதோர் இடர்ப்பாட்டுடன் கீழிறங்கித் தம்மவர்பால் சென்று அதனை எல்லார்க்கும் பெருங்கிளர்ச்சி உண்டாகத் தெரிவித்தனன்.

மறுநாட்காலையில், அம்மலையைச் சூழ்ந்திருந்த காலவர்கள் முன்நாள் இரவு செங்குத்தாய் நின்ற அதன் பக்கத்தில் எவரோ ஏறிச் சென்ற அடையாளங்களைக் கண்டார்கள். ஏனென்றால், அங்கங்கே அப்பக்கத்தில் வளர்ந் திருந்த சிறு தூறுகளும் படர்கொடிகளும் அலைக்கப்பட்டு இடையிடையே முறிந்து காணப்பட்டன; கற்பாறைகளில் பிடித்திருந்த பாசிகள் கைகால் உரைசித் தேய்வுண்டிருந்தன; புதிய உருண்டைக் கற்களும் மண்ணும் மேலிருந்து கீழ் உதிர்ந்து சிதறிக் கிடந்தன. இவ்வடையாளங்களைக் கண்டதும் காலவர்கட்குச் சினம் மூண்டது. நகரவாழ்க்கையிலிருந்து மென்மையாய் வளர்ந்த ஓர் உரோமன் இருள்செறிந்த அவ்விரவில் செங்குத்தான அம்மலைப் பக்கத்தே ஏறிச் சென்றனனென்றால் பனிக்கட்டி நிறைந்த மலைக் குவடுகளிலும் இருண்டு ஆழ்ந்த மலைப் பிளவுகளிலும் ஆலங்கட்டிகள் குவிந்த ஆலூப்பு மலைகளிலும் வாழ்க்கை செலுத்தும் முரடராய் வளர்ந்த காலவர்கள் அம்மலை மேல் ஏறுதற்குப் பின்வாங்கலாமோ எனப் பிரான் தலைவன் எண்ணினான். பிறகு, தம் மலை வாணரில் மிகவும் திண்ணியரா யுள்ளாரைத் தெரிந்தெடுத்து, நள்ளிராப் பொழுதில் சிறிதும் அரவம் இன்றி அவர்கள் ஒருவர்பின் ஒருவராய் அம்மலை மீதேறி, உரோமரைத் திடுமெனத் தாக்கி, அவர்கட்கு 'வை' என்னும் ஊரிலிருந்து உதவிப்படை வருமுன் அவர்கள் அனைவரையும் வெட்டிக் குவித்து வெற்றிகொள்க என அவன் அவரை ஏவினான்.

அவன் ஏவியபடியே திண்ணிய காலவர்கள் ஒரு சிறிதும் ஓசையுண்டாகாமல் ஏறியதனால், அக்கோட்டையில் காவலாய் நின்ற நாய்களும் அவரது வருகையினை அறிந்தில. மதின்மேற் காவலாய் நின்ற படைஞனோ பசிக்களைப்பில் உண்டான கடும் தூக்கத்தில் தன்னைமறந்து கிடந்தான். என்றாலும், “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்னும் மூதறிஞர் உரைப்படி, கோட்டையின் உள்ளிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/163&oldid=1584777" இலிருந்து மீள்விக்கப்பட்டது