உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

129

மெய்யாகவே அச்செங்குத்தானபக்கம் மேலேற விரும்பு வார் எவர்க்கும் பேரச்சத்தை விளைப்பதொன்றாகவே தோன்றியது. ஆனால் தன்னுயிரையும் ஒரு ஒரு துரும்பாய் எண்ணித் தான் முடிக்கக் கருதிய அருவினையிலேயே கண்ணும்கருத்தும் உடைய அவ்வாண் மகனுக்கோ அஃதொரு தடையாய்க் காணப்படவில்லை. அவன் இருள் சூழ்ந்த அவ்விரவில் அம்மலைப் பக்கத்திற் படர்ந்திருந்த வேர்களைக் கைகளாற்பற்றிக் கொண்டும், பைம்புற் பொழிகளின் அடியில் காலடிகளை உதைந்துகொண்டும் தொற்றித்தொற்றி இவர்ந்து, அம்மலையுச்சியில் போய் அக்கோட்டைக் கொத்தளத்தின் மேல் நின்றான். நின்ற வனைப் பகைவனென்றோ நண்பனென்றோ அறியாமையால் அங்கிருந்த காவலாளர் விரைந்து போந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அங்ஙனம் சூழ்ந்தார்க்கு அவன் தன் பெயரை எடுத்துச் சொல்லி இலத்தீன் மொழியில் பேசவே, ஆறு திங்களாகத் தம்மவரின் ஒரு புதியமுகத்தையும் காணப் பெறாமல் பட்டினியும் பசியுமாய் அதனுட் கிடந்து மாழ்கிய உரோமர்கள் அவன் முகத்தைக் கண்டும் அவன் தமது தாய்மொழியில் பேசிய சொற்களைக் கேட்டும், போன உயிர் மீண்டவர்களாய் அளவிலாக் களிப்பெய்தினர்.

அங்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அரசியல் தலைவர்களும் கடிதில் எழுப்பப்பட்டு அவன்பால் வந்து குழுமினர். ஆரதியத்தைக் காலவர் வந்து தாக்கினமையும், காமிலியன் உடனே தம்மூராரைப் படைதிரட்டிக் கொண்டு சென்று, அவரை எதிர்தாக்கி மாய்த்தமையும், இப்போது அரசியல் தலைவர்கள் ஒருங்கிசைந்து அக்காமிலியனைப் படைத்தலைவனாக ஏற்படுத்திக் கட்டளை தந்தால் சிதர்ந்து போன உரோமர்கள் அத்தனை பேரும் அவன்கீழ் ஒருங்கு திரண்டு வந்து பகைவரை அழித்துக் கவித்தலை மலைக் கோட்டையை மீட்க முனைந்து நிற்றலையும் அவன் சுருக்க மாகவும் அழுத்தமாகவும் அவர்கட்கு எடுத்துரைத்தான். உடனே அரசியல் தலைவர் அனைவரும் மறுமாற்றம் இன்றி ஒத்து ஒருமுகமாய் "காமிலியனையே நம்மவர் எல்லார்க்கும் ஒப்புயர்வில்லாப் படைத்தலைவனாகத் தந்தோம்” என்று உறுதிமொழி பகர்ந்தனர். அம்மகிழ்வான செய்தியைப் பெற்றுக்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/162&oldid=1584776" இலிருந்து மீள்விக்கப்பட்டது