உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

66

1. திங்களைத் தொழுதல்

"திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான்'

- சிலப்பதிகாரம்

திங்களை வடநூலார் 'சந்திரன்' என்னும் பெயரால் வழங்குவர்; தமிழ்மக்கள் அதனை நிலவு, அம்புலி, பிறை, திங்கள், தண்கதிர், கலையோன், இரவோன், அலவன், அல்லோன், மதி, களங்கன், குரங்கி, முயற்கூடு முதலான பலபெயர்களால் வழங்காநிற்பர். குளிர்ந்த ஒளியினை நிலவு எனத் தமிழ்நூலார் கூறக் காண்டலாற், குளிர்ந்த ஒளியினைத் தருந் திங்களும் நிலவு எனப் பெயர் பெறுவதாயிற்று. அம்புலி என்னுஞ்சொற் சிறுமகாரால் இடப்பட்டதாகும். பிறை என்பது மறைநிலா நாளின்பிற் பிறந்த சிறுதிங்களுக்குப் பெயராக வழங்குகின்றது; புதிது பிறத்தலிற் பிறையெனப் பட்டது. உயிர்கள் உடம்புகளில் நிலைபெற்று வளர்தற்குரிய அமிழ்து நிலவொளியிலிருந்து வருதலாலும், அவ்வமிழ்து தமிழிற் ‘கள்' எனப் பெயர் பெறுதலாலும், இனிமையெனப் பொருள்தரும் தீம் என்னுஞ்சொற்குறுகித் திம் என நின்று கள் என்னுஞ் சொல்லொடுகூடித் திங்கள் என அதற்குப் பெயராயிற்று. தண்கதிர் என்பது அது குளிர்ந்த ஒளியினைத் தருதலால் வந்த பெயராகும். கலையோன் என்பதிற் கலை யென்பது நிலவொளியின் ஒருபகுதியைக் குறிக்கும்; நாளுக்கொரு கலையாக வளர்தலுந் தேய்தலுமாகிய தோற்றந் திங்களிற் காணப்படுதலால் அதற்குக் கலையோன் எனும் பெயர் போந்தது. இராப்பொழுதில் விளங்குதல்பற்றி அஃது இரவோன், அலவன், அல்லோன் எனும் பெயர்களைப் பெற்றது; அலவன், அல்லோன் என்பவற்றின் முதல் நின்ற அல் என்னுஞ்சொல் இராக்காலத்துக்குப் பெயராகும். இனி, அது பதினைந்துநாள் வளர்ந்தும் பதினைந்து நாள் தேய்ந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/173&oldid=1584787" இலிருந்து மீள்விக்கப்பட்டது