உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

  • மறைமலையம் -18

முப்பதுநாள் கொண்ட ஒரு காலத்தை வரையறுத்தலால் மதியெனப் பயர் பறலாயிற்று; மதித்தல் என்பது வரையறுத்தல். இங்ஙனந் திங்களால் வரையறுக்கப் படுதல் பற்றி முப்பதுநாள் காண்ட ஒருகாலவளவுந் திங்களெனச் சொல்லப்படும். திங்களை வடநூலார் 'மாசம்' என்பர். இன்னும் அஃது இடை யிடையே கறையுடை யது போற் காணப்படுதலாற் களங்கன் என வழங்கப்படுகின்றது. குரங்கு எனுஞ் சொல்வளைவு எனப் பொருடருதலால், வளைந்து தோன்றும் பிறை குரங்கி எனப் பெயர்பெற்றது. இனித் திங்களிற் காணப்படுங் கறை சிறுமகார் கண்களுக்கு முயல் வடிவாகத் தோன்றுதலிலிருந்து அவர் அதனை முயல் உரையுங்கூடாக வழங்க, அதனால் முயற்கூடு என்னும் பெயரும்அதற்கு உளதாயிற்று என்க.

இங்ஙனம் பலவகைப் பெயர்களாலும் வழங்கப்பட்டுத் திகழும் நிலாமண்டலமானது, வெம்மை மிகுந்த த் தமிழ்நாட்டிலுள்ளார்க்கு இராக்காலத்தே குளிர்ந்த மெல்லிய ஒளியினைத் தருதலால், அவர்கள், பகற்காலத்தே வெப்பத்தையும் அயர்வையும்நீக்கித் தமக்கு அங்ஙனந் தண் ணொளிதருந் திங்களையே மிகமகிழ்ந்து கொண்டாடா நிற்கின்றனர். மேலும், நிலவொளி இல்லா இராக்காலத்தே இருள் திணிந்திருக்க. அவ்விருளிற் பாம்பு, தேள், நட்டு வாய்க்காலி, பூரான், செய்யான் முதலான நச்சுயிர்களும்; புலி, கரடி, அரிமா, ஓநாய், நரி முதலான மறவிலங்குகளும்; கள்வர், திருடர், கொலைஞர் முதலான கொடிய மக்களும் இயங்கி, மாந்தருக்கும், மாந்தருக்குப் பலவகையிற் பயன்படும் ஆடு, மாடு, குதிரை முதலான அற விலங்குகட்கும் பெருந்தீங்கையும் பருந்துன்பத்தையும் பொருட்கேடு உயிர்க்கேடுகளையும் விளைவித்தலால், இருள் ருள் நிறைந்த இராப்பொழுதைக் காண்டலும் அமைதியான வாழ்க்கை செலுத்தும் மக்கள் அனைவரும் நெஞ்சந் துணுக்குறுகின்றனர். அங்ஙனம் நெஞ்சந் துணுக்குறாமல் துணிவாய் நள்ளிருளில் விளக்குமின்றி வழிநடந்து செல்லும் நாட்டுப்புறத்தாரில் எத்தனைபேர் அரவுதீண்டியும் புலிகோட்பட்டும் ஐயோ! வீணே சாகின்றனர்! இன்னும் எத்தனைபேர் தேள், நண்டுத்தெறுக்கால் கொட்டியும், பூரான், செய்யான் கடித்தும் ஆற்றொணாப் பெருந்துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/174&oldid=1584788" இலிருந்து மீள்விக்கப்பட்டது