உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

இளைஞர்க்கான இன்றமிழ்

143

உழக்கின்றனர்! இவ்வளவு கேட்டுக்குந் துன்பத்திற்கும் ஏதுவான இருள்செறிந்த இராப்பொழுதினைக் கண்டவுடனே மெல்லிய நெஞ்சமுடையார் எல்லாரும் அஞ்சிக் கலங்குதல் ஏற்பதேயாகும். உயிரினருமையும் உடம்பினருமையும் இன்ப வாழ்க்கையினருமையும் அறியா விலங்குகளை யொத்த மாக்கள், கரிய இருள்சூழ்ந்த இரவைக் கண்டு கலங்காரா யினும், அவ்வருமைகளையும், அவைகளை அருள்கூர்ந்து வழங்கிய ஆண்டவன் நோக்கத்தையுஞ் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கத்தக்காரெவரும் இருளிரவைக் கண்டு மருளாதிரார். சிறிதுணர்வுடையாரே அவ்வாறாயிற், பெரி துணர்வுடைய பாவலர், நாவலர், நல்லிசைப் புலவர், சான்றோர், ஆன்றோர் முதலாயினாரெல்லாரும் பொங்கிருள் செறிந்த கங்குற்காலத்தில் எங்ஙனம் உளம் அழுங்கு நுண்ணுணர்வும் மன்மைத் தன்மையும் வாய்ந்த அவரல்லரோ இராப்பொழுதில் எழிலொளி கிளர்ந்து முழுமதி விளங்குதல் கண்டு வரம்பிலா மகிழ்ச்சி நிரம்பி நிற்றற்குரியார்! நிலவொளியின் அழகை மிகுதியாய் உணர்ந்து இன்புறாத நாட்டாட்களுங் காட்டாட்களுங்கூட, நாட்டிலுங் காட்டிலுந் தாம் வழி தெரிந்து செல்லுதற்குந், தீய உயிர்களால் ஊறுசெய்யப் படாமல் அவைகளை விலகிச் செல்லுதற்கும் நிலாவெளிச்சம் உதவி செய்தல்பற்றி அதனை மிகவும் விரும்பா நிற்கின்றனர்.

வாராதல்

வேண்டும்!

ன்

மற்ற, அதன் வனப்பையும் பயனையும் அறிந்து இன் புறுகின்ற உணர்வுடையாரோ “நிலவு எப்போது வரும்! நிலவு எப்போது வரும்!” என்று அதன் வருகையை எதிர்பார்த்த வண்ணமாய் இருக்கின்றார்கள், முழுவிருள் கழிந்த மூன்றாம் நாள் மாலையில் மேல்பாற் செக்கர் வானத்தின்கண்ணே வளைந்த வெள்ளிக் கம்பிபோற் காணப்படும் பிறைக் கொழுந் தினை அவர்கள் எத்துணை ஆவலுடன் உற்று நோக்கிக் கண்டு தொழுகின்றனர். இருளில் ஏங்கிக் கிடந்த அறிஞரின் கண் களுக்கல்லவோ அச்சிறு பிறையின் வெளிச்சமும் பெரிதாய்க் காணப்படுகின்றது. புறத்தேயுள்ள இருளைத் துரக்கும் பிறையின்றோற்றம் அகத்தேயுள்ள மலவிருளைத் துரக்கும் இறைவன்றன் அருளொளித் தோற்றத்திற்கு அடையாளமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/175&oldid=1584789" இலிருந்து மீள்விக்கப்பட்டது