உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் -18

பிறையாகவுங்

கருதி

வயங்குகின்றதன்றோ? மாலைப்போதில் மேல்பாற் சிவந் தொளிரும் ஞாயிற்றினை இறைவன் திருமுகமாகவும், அஞ்ஞாயிற்றின் உச்சியிற் கிளர்ந்து வானிற் பரந்து பாய்ந்து விளங்குஞ் செக்கர் ஒளியினை இறைவன் றிருமுடிமேலுள்ள சடைப்பரப்பாகவும், அச்செக்கர்வானிற்றோன்றும் பிறையினை அச்சடைப் பரப்பிற்றங் பரப்பிற்றங்கும் அதனை வழிபட்டு வருந் தமிழ்நாட்டு மேன்மக்களின் உயர்ந்த கருத்துங் கடவுள் கொள்கையும் பெரிதும் வியக்கத் தக்க விழுப்பம் வாய்ந்தனவாய்க் காணப்படுகின்றன வல்லவோ? அழகும் அறிவுங் கெழுமத் தோன்றிய இத் தமிழ்ப்பெருங்கொள்கை வேறெந்த நாட்டவரிலுங் காணப் படுகின்றிலது. தமிழ்நாட்டு மாதர்கள், மணம் ஆகாத தம் பெண்மக்கட்கு விரைவில் மணங்கூடும்பொருட்டு அவர்கள் மூன்றாம் பிறையைத் தொழும்படி செய்யும் வழக்கம் முன் னிருந்தமை, திருவாதவூரடிகள் அருளிச் செய்த,

“மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்,

உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன் சடை மேல தொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே

என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையார் திருப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது.

இவ்வாறு இருளிரவுகழிந்த மூன்றாம்நாட் டோன்றுஞ் சிறுபிறையின் வடிவே, பின்வரும் நிலாநாள் இரவுகளை முன்னறிவித்து, இயற்கை யொளித் தோற்றத்தில் இறைவனது விளக்கம் முனைந்துநிற்றலை நினைவில் எழச் செய்து எல்லாரையும் இன்புறுத்துமானால், அடுத்துவரும், நாட் களில் அப்பிறை வரவரவளர்ந்து குளிர்ந்த பேரொளி வீசி இராப்பொழுதை இராப்பொழுதாக்குங்கால், அது நம்மனோர்க்கு இன்னும் எத்துணை மிகுந்த மகிழ்ச்சி யினைப் பயப்பதாகல் வேண்டும்! மூன்றாம் பிறைக்குப் பின் நாலைந்துநாட் சென்றபின் நீலவானிற் றிகழும் பாதி மதியினைக் கண்டு மகிழ்ந்து, அதன் அழகிய காட்சியினைப் புனைந்து பாடிய நல்லிசைப் புலவரிற் சிலர், அதனை வானக்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/176&oldid=1584790" இலிருந்து மீள்விக்கப்பட்டது