உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

இளைஞர்க்கான இன்றமிழ்

L

145

கடலிற் செல்லும் ஓர் ஓடமாகச் சொல்லியிருக்கின்றனர்; பின்னுஞ் சிலர் இருள் என்னும் அரக்கனைத் துணித்தற்கு இந்நிலமங்கை உயர ஏந்திய ஒரு கொடுவாளாகவும் அதனைக் கூறினர். பின்னர்ப் போந்த முழுநிலாக் காலத்தே அதன் முழு வட்டப் பேரொளியை நோக்கிக் களிகூர்ந்த பாவாணர் சிலர் அதனை வானெனும் வாவியில் மலர்ந்த ஒரு தூவெண்டாமரை மலரேயெனச் சொற்றனர்; பாற்கடல் கடைந்தஞான் றெழுந்த வெண்பொற் பாற்குடமே அம்முழுமதி யெனவும், அக்குடத் தினின்று தெறித்துச் சிதறிய பாற்றுளிகளே அதனைச் சூழமிளிரும் விண்மீன்களெனவும் விளம்பினர்; மற்றுஞ்சிலர் அதனை வான் எனும் நீலப் பட்டாடையின்கீழ் நாலத் தூக்கிய பளிங்கு விளக்கேயெனப் பகர்ந்தனர். இவ்வாறாகப் பாவலரும் நாவலரும் புலவரும் அறிஞரும் நிலவின் அழகிய காட்சியை நோக்கி வியந்து மகிழ்ந்து அதனைப் புனைந்துரைத்த அணிந்துரைகள் அளவிலாதனவாய் விரிந்து கிடக்கின்றன.

இங்ஙனமெல்லாம் பண்டைச் செந்தமிழ்ப் புலவர் திங்களின் அழகிய காட்சியினை வியந்து பாடியதுமன்றி, அதன்தோற்ற ஒடுக்கங்களால் நிலையில்லா வாழ்க்கையினை யுடைய மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய நிலையான உண்மைகளையும் ளயும் எடுத்துக்காட்டி அறிவு அறிவுதெருட்டியிருக் கின்றனர். திங்களானது கலைநிரம்பிய பதினைந்து நாட் களுக்குப்பிற் சிறிதுசிறிதாகத் தனது விளக்கங்குன்றிக் கடைசியாகத் தானென்றொருமுதல் இல்லாததுபோல் மறைந்து போகின்றது. அதுபோலவே, மக்களில் எத்துணைச் சிறந்த நிலையில் இருந்த அரசருஞ் செல்வரும் பிறருந் தமது சல்வவாழ்க்கையும் உடம்பின் உரமும் வரவரக்குன்றி இறுதியாகத் தாமென்றொருமுதல் இல்லாதவாறாகவே இறந் தொழிந்து போகின்றனர். இனி, நள்ளிருள் கழிந்த மூன்றாம் நாள் திடுமெனச் சிறுகீற்று வடிவாய்த் தோன்றும் பிறை உருவும் ஒளியும் வரவரப் பெருகிப் பதினைந்தாம் நாட் பெருவிளக்ககத்ததாகி அந்நாளில் வானும் நிலனுந் தனது ழிலொளிப் பெருக்கில் முழுகி விளக்கத்தான் நிகரின்றி நிலவுதல்போலத், தமது முன்னைநிலை இன்னதென்றே தாமும் அறியாமற் பிறரும் அறியாமற் சடுதியில் மக்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/177&oldid=1584791" இலிருந்து மீள்விக்கப்பட்டது