உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

  • மறைமலையம் -18

மகவாய்ப்போந்து பிறந்து உடலிலும் ணர்விலுஞ் செல்வத்திலும் வாழ்விலும் மிக மிகச் சிறந்து சிலர் பலர் சிலகாலந் தலைமை செலுத்துகின்றனரல்லரோ? இவ்வாறு திங்களின்தேய்தல் வளர்தல்களிலிருந்து அறியற்பாலனவாகிய மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் பழைய நல்லிசைப் புலவர்,

66

‘எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லா ராயினும் வல்லுந ராயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி, அருள்இலர்

கொடாமை வல்லர் ஆகுக!

கெடாத துப்பின் நின்பகை யெதிர்ந்தோரே”

சோழன்

(புறநானூறு, 27) என்னுஞ் செய்யுளிற் நலங்கிள்ளி', என்னும் வேந்தனு என்னும் வேந்தனுக்கு எடுத்தறிவுறுத்தி அதனைப் பாடியிருக்கின்றனர். நிலையாச் செல்வவாழ்க் கையை நிலையென மருண்டு தம்மை மறந்து இறுமாந் தொழுகுஞ் செல்வரெதிரே உண்மை பேசுதற்கஞ்சி அவரது முகத்தெதிரே இனிக்கப் பேசி, அவர் வீசியெறியுங் காசைப் பெற்று மகிழும் பிற்றைஞான்றைப் பொய்ப்புலவர் போலாது, முதுகண்ணன் சாத்தனார் எத்துணைத் திட்ப மான நெஞ்சமுடன், மாவேந்தனான சோழன் நலங்கிள்ளிக்கு, நிலையில்லா மக்கள் வாழ்க்கையின் தன்மையினையும், அதுகொண்டு நிலையுள்ள அறஞ்செய்யும் வண்மையினை யுந் திங்களின் இயக்கத்தில் வைத்து நன்கு அறிவுறுத்தி மேலைத் தனிச்செந்தமிழ்ப்பாவினை அருளிச் செய்திருக்கின்றார்

பார்மின்!

மேற்காட்டியவாறு திங்கண்மண்டிலமானது இராக் காலத்தே புறத்துப்பரவிய இருளை இரித்துக் கண்ணறிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/178&oldid=1584792" இலிருந்து மீள்விக்கப்பட்டது