உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

147

விளங்கச்செய்து நமக்கு அழகிய காட்சியையும் அதனாற் பருகிய மகிழ்ச்சியையும் அளித்தல் போலவே, தேய்ந்து வளருந் தனது இயக்கத்தால் அது மக்கள் வாழ்க்கையின் நிலையாமையினை யறிவித்து அகத்தே பரவிய ஆணவ விருளை நீக்கி, என்றும் நிலையுதலுடைய இறைவன்றன் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுதலில் நமக்குக் கருத்து விளங்கி ஈடுபட்டு மேலெழுமாறுஞ் செய்கின்றதன்றோ? ஆதலால், முழுவெண்டிங்களை இறைவனது அருளொளி முனைத்து விளங்கும் இடமாகக் கொண்டு, அதனைப் புறத்தே வான் வெளியிலும், நமதகத்தே புருவத் திடைவெளியிலும் புறக்கண் அகக்கண்களால் விளங்கக் கண்டு தொழுதல் இன்றியமை யாததொரு கடவுள் வழிபாடாமென்க. இது பற்றியே நம் பண்டையாசிரியரான பாரதம் பாடிய பெருந்தேவனார்,

“பிறைநுதல் வண்ண மாகின்று, அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; எல்லா உயிர்க்கும் ஏம மாகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே”

என்று புறநானூற்று முகப்பிற் பிறைமதியை

இறைவன்

திருமுடிமேல் வைத்துத் தொழுதல் செய்வாராயினர். அப் பண்டையாசிரியர் வழிவந்த நாமும் அந்நன்னெறி கடைப் பிடித்துத் திங்களைப் போற்றுவாமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/179&oldid=1584798" இலிருந்து மீள்விக்கப்பட்டது