உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் 18

2. சந்தன மரம்

ஞ்

சந்தனமரமானது பழைய செந்தமிழ் நூல்களிற் சந்து, சாந்தம், ஆரம், மலயம் முதலான பல பெயர்களால் வழங்கப் படுகின்றது. இந்நான்கிலுஞ் சாந்தம் என்னுஞ் சொல்லே ஆண்டுமிகுதியாய் வழங்கா நிற்கின்றது. சாந்தம் என்னு சொல்லே சாந்து, சந்து எனக் கடைக் குறைந்தும் அதனொடு முதற்குறுகியும் வழங்குகின்றது. சந்து என்பதே பிற்காலத்திற் சிலவெழுத்து மேலுங் கூடிச் சந்தனம் என மிகுதியாய் வழங்குதலைக் காண்கிறோம், மலயம் என்னுஞ் சொல் தமிழ்நாட்டின் தெற்கே உளதாகிய பொதியமலைக்கே சிறப்புப் பெயராக வழங்கி வருதலால், அம்மலைக்கண் நிரம்பிவளருஞ் சந்தனமரமும் 'மலையம்' எனப் பெயர் பெறுவதாயிற்று. இம்மலையம் என்னும் பண்டைத் தமிழ்ச்சொல்லே சந்தன மரத்திற்குப் பெயராக வடமொழி அமரநிகண்டு கூறுதலை உற்றுநோக்குங்காற், சந்தனமரம் தமிழ்நாட்டிற்கே உரித்தாவ தென்பதும், அதனாற் சந்தனம் என்னுஞ் சொல்லும் அதற்குப் பெயர்களாக மேலெடுத்துக்காட்டிய ஏனைப் பழஞ்சொற்கள் நான்குந் தனிச்செந்தமிழ்ச் சொற்களே யாமென்பதும் நன்குபெறப்படா நிற்கும்.

இனிச், சந்தனமரமானது தெற்கேயுள்ள பொதிய மலையில் மிகுதியாய் வளர்வதாயிருந்தாலும், மற்றை யிடங்களிலுள்ள மற்றைமலைகளிலும் மலைநாடுகளிலும் அது சிறுகவாயினும் வளர்கின்றது. இது மிக உயரமாக வளர்வ தன்று, நாரத்தை மரத்தினளவே உயர்வது. இதனுடைய இலைகள் வேற்படையின் முனைத்தகட்டைப் போன்ற வடிவமைந்துள்ளன. இதன்மரம் முற்றிக் காழ்ப்புக் கொள்ளு L மானாற், காழ்ப்புக் கொண்ட நடுக்கட்டை மிகுந்தமணம் வீசுகின்றது. சந்தனப்பூவும் மிகு மணம் வாய்ந்தது. சந்தன மரத்தின் கட்டைகள் மஞ்சள் நிறம் உடையனவும், வெண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/180&oldid=1584807" இலிருந்து மீள்விக்கப்பட்டது