உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் -18

எல்லாம் அஃதயருமிடத்து ஒருங்குவந்து தொகுதல்பற்றி யேயாம். இங்ஙனமெல்லாம் உடம்பும் உள்ளமும் ஒரு ங்கே குளிர்ந்து தூயவாய்த் திகழ்தற்குப் பேருதவிசெய்யும் மணப் பண்டங்களுட் சிறந்ததாகிய சந்தனம் இல்லாத ஒரு கொண் டாட்டமுந் திருநாளுந் தமிழ்நாட்டில் எங்குமே இல்லை. இத்துணைச் சிறந்ததாகிய இச்சந்தனம் இயற்கையில் இத்தமிழ்நாட்டுக்குக் கிடைத்தாற்போல வேறுநாடுகளுக்குக் கிடையாமையும் நினைவிற் பதிக்கற்பாற்று.

L

சந்தனக்கட்டைகளினின்று வடித்தெடுக்கப்படும் நெய் மி குமணங் கமழ்வது. மகிழ், முல்லை, மருக்கொழுந்து, மலைப்பச்சை, வெட்டுவேர் முதலியவைகளினின்று இறக்கப் படும் மணநெய்யெல்லாஞ் சந்தனநெய்யிற் கலந்தே செய்யப் படுகின்றன. தன்னிற் கலக்கப்படும் இம்மணநெய்களின் மணம் இல்லையாய்ப் போன பின்னுஞ், சந்தனநெய்

தன்

இ மணங் குறையாதாய்க் கமழுந்தன்மை யொன்றுமட்டும் உடையதன்று. ஆண் பெண் பாலார்க்குக் குறிகளைப் பற்றி வருங் கொடுநோய்களையுந் தீர்க்குந் திறம் வாய்ந்தது. உப்புப், புளி, காரம், நல்லெண்ணெய், கடுகு, பாகற்காய், காப்பிவிதை, தேயிலை, கோக்கோ முதலானவைகளை உணவாகவுங் குடிநீராகவும் அருந்தாமல், இச்சசந்தன நெய்யை நாற்பது நாட் சிறிது சிறிது பருகிச் சிறந்த உணவுப்பண்டங்களையே யருந்திவரிற் குறிவழிவந்த நோய் கொண்டார் அந்நோய் வேரோடு அறப்பெற்றுத், தமதுடம்பு பசும்பொன்னென மிளிரப்பெறுவர். இல்லத்தினுள்ளே முடைநாற்றந்தரும் அழுக்குக்களை அகற்றி, இச் சந்தனநெய்யைச் சில துளிக ளாக நெருப்பிலிட்டுப் புகைத்தாலும், வெந்நீரிற்கலந்து தெளித்தாலும், அது வீட்டிலுள்ள டிலுள்ள நச்சுப்பூச்சி நச்சுக் காற்றுக்களை அகற்றி உடம்புக்கு நலந்தருவதல்லாமலுந், தனது நறுமணத்தால் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தந்து அதற்குப் பெரியதோர் ஆறுதலையும் பயக்கும்.

இத்துணைச் சிறந்த சந்தனமரங்களைப் பண்டைத் தமிழரசர்கள் செல்வர்கள் தம்முடைய மலைகளில் நிரம்ப வைத்து வளர்த்து, அவற்றின் குழம்பைத் தம்முடைய உடம்பில் மிகுதியாய்ப் பூசி வந்தனரென்பதும், அவர் தம் மகளிர்கள் தமது மார்பின்மேற் சந்தனக்குழம்பாற் கோலம்

பூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/182&oldid=1584824" இலிருந்து மீள்விக்கப்பட்டது