உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

151

வரைந்து கொள்வதென்பதும், அங்ஙனம் வரையுங்கோலந் 'தொய்யில்' எனப் பெயர் பெறுமென்பதும் பழைய செய்யுட் களால் இனிது புலனாகின்றன.

ஈகையிற்சிறந்த வேள்பாரி என்னும் மன்னனுக்குரிய ‘பறம்பு' என்னும் மலையிடமெங்குஞ் சந்தனக் காடுகளே செறிந் திருந்தனவென்றும்., அம்மலைமேல் உறையும் குறத்திப் பெண்கள் அங்குள்ள சந்தனமரக்கட்டைகளையே விறகாக மாட்டி அடுப்பெரித்தனரென்றும் நல்விசைப் புலவரான கபிலர் பாடிய,

அம்மன்னன்மேற்

“குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆர மாதலின் அம்புகை அயலது

சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்

பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின்

வாரேன் என்னான் அவர்வரையன்னே

என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் ( புறநானூறு, 108) அறிவித்தல் காண்க.

ம்

பழைய தமிழ்நூல்களில் ‘எருமையூர்’ என்றும், இஞ் ஞான்று ‘மைசூர்' என்றும் வழங்கப்படுவதாகிய நடுநாட்டின் மலைகளில் ஏராளமாகப் பயிராகுஞ் சந்தனமரங்களின் கட்டைகள் நனிமணங் கமழ்வனவாயும், அழுத்தம் வாய்ந்தனவாயும் இருக்கின்றன. இக்கட்டைகளில் மிக அழகிய தெய்வவுருக்கள் விலங்குகளின் வடிவுகள் பூங் காடிகள் செடிகள் மரங்கள் முதலியவற்றின் காட்சிகள் பெரிதும் வியக்கத்தக்கவாறாய்க் கம்மர்களாற் செதுக்கி யமைக்கப்படுகின்றன. சந்தனக்கட்டைகளிற் கொத்திய இவ்வுருக்களில் திறமானவைகளைச் சென்னையிலுள்ள கண்காட்சி நிலைய’திற்குச் செல்வாரெல்லாருங் கண்டு மிகவும் இறும்பூது எய்துகின்றனர்.

இனி, வேனிற்காலத்தில் வெங்கதிர் வெப்பம் முதிர்ந்து அழற்றும்போது இத்தென்றமிழ்நாட்டவர், சந்தனத்தை அரைத்து, அவ்வரைப்பைத் தனியாகத் தண்ணீரிற் கலக்கி யேனும், மணக்கூட்டுகளுடன் சேர்த்துப் பனிநீரிற் குழப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/183&oldid=1584832" இலிருந்து மீள்விக்கப்பட்டது